Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூரி » வானிலை

பூரி வானிலை

இங்கு செல்வதற்கு ஏற்ற காலம் ஜூன் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். இதற்கான முழு முதற்காரணம் யாதெனில், ஜூலை மாதத்தின் போது தான் உலகப் பிரசித்தி பெற்ற ரத யத்திரை இங்கு கொண்டாடப்படுகிறது. வருடத்தின் இந்த காலகட்டத்தில் தாம் போற்றுதலுக்குரிய ஏனைய பல திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. மேலும், இக்காலத்தின் போது வானிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

கோடைகாலம் பொதுவாக சுமார் 27 டிகிரி மற்றும் 45 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட வெப்பநிலையோடு மிகவும் வெம்மையுடன் காணப்படும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களே கோடைகால மாதங்களாகும். மார்ச் மாதத்தின் போது சற்றே சாதகமாக இருக்கும் வானிலை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் போது தாங்கவியலாததாக இருக்கும்.                             

மழைக்காலம்

மழைக்காலத்தின் போது இந்த புனித நகரம் மிதமானது முதல் கடுமையானது வரையிலான மழைப்பொழிவைப் பெறும். சுட்டெரித்த கோடைக்குப் பின், மழைக்கால மேகங்கள் ஜூன் மாதத்தில் நகரின் மேல் கவிய ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரையில் தொடரும். அழகிய வானிலை நிலவக்கூடியதான மழைக்காலத்தின் போது பூரிக்கு செல்வது சிறப்பானதாக பரிந்துரைக்கப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கும். வெப்பநிலை சுமார் 10 டிகிரி மற்றும் 18 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டதாக இருக்கும் இக்காலத்தில், குளுமையான வானிலை நிலவும். இத்தகைய வானிலை, சுற்றிப் பார்த்தல் மற்றும் இதர சுற்றுலா செயல்பாடுகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். குளிர்காலத்தின் போது பூரி செல்லும் சுற்றுலாப் பயணிகள், கையோடு மெல்லிய கம்பளித் துணிகளை எடுத்துச் செல்வது நலம்.