பிரம்மகுந்த் என்றழைக்கப்படும் வெந்நீர் ஊற்று வைபவ மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து வரும் வெந்நீர் சப்டதாரா என்ற ஏழு ஓடைகளில் இருந்து வரும் நீராகும்.
இந்த ஊற்றில் அதிக வெப்பத்துடன் வரும் நீர் 45 டிகிரி சென்டிக்ரேட் வரை இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித் தனி குளங்கள் உள்ளது. இந்த ஓடையில் சரும வியாதிகளை குணமாக்க பல அபூர்வ மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.