ரெடிக்கு வரும் பயணிகள் தேவி நவதுர்கா கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மஹிசாசுர மர்த்தினியின் சிலை கோவாவின் திஸ்வாடி தாலுக்கா பகுதியிலிருந்து 10-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது.
அதன் பிறகு 16-ஆம் நூற்றாண்டில் போர்துகீசியர்களின் படையெடுப்பு காரணமாக இந்த சிலை திஸ்வாடியிலிருந்து ரெடிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிலை 450 ஆண்டுகள் பழமையானது.