மேகாலயாவில் உள்ள ரி போய் மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த மையமாக விளங்குகிறது நோங்போ. குறைந்த விலையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்க விரும்புபவர்களுக்கு மத்தியில் இது புகழ் பெற்ற சந்தையாக திகழ்கிறது.
காசி வகை உணவுகள் பலவற்றை இங்கே ருசித்துப் பார்க்கலாம். எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டத்தோடு நிரம்பி வழியும் இந்த சந்தை. அஷில் சில பேர் உள்ளூர்வாசிகளாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் சுற்றுலாப் பயணிகளே.
ஓரிரு நாட்கள் மட்டும் இங்கே தங்க விரும்புபவர்கள் ப்ரீஸ்டேல் டூரிஸ்ட் ரிசார்ட்டை தேர்ந்தெடுக்கலாம். சொகுசு விடுதியாக விளங்குகிறது இந்த விடுதி. இந்த விடுதியின் பணியாளர்கள் தங்குபவர்களிடம் அடக்கத்தோடு நடந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் புரிவார்கள்.
நோங்போ தேசிய நெடுஞ்சாலை-40ல் அமைந்துள்ளது. இது ஷில்லாங்கிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் குவஹாத்தியிலிருந்து 48 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஷில்லாங் அல்லது குவஹாத்தியிலிருந்து நோங்போவிற்கு டூரிஸ்ட் வாகனங்கள் மூலமாக வரலாம். வரும் வழியெங்கும் கிராமப்புற சாலையாக உள்ளதால் பயணம் இனிமையாக அமையும்.