ரிஷிகேஷில் புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்குகளில் மலையேற்றமும் ஒன்றாகும். தாலிசைன்யில் இருந்து பெளரி வழியாகச் செல்லும் கார்வால் இமாலயத் தொடர் இங்கிருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதையாகும்.
புவானி நீர்குட்டில் இருக்கும் சிறிய மலையேற்றப் பாதையையும் வார இறுதிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பகுதிகளில் மலையேறுவது சுலபமாக இருப்பதால் அவ்வளவாக உடல் வலிமை இல்லாதவர்கள் கூட மலையேற்றத்தில் பங்கு கொண்டு மகிழலாம்.
5029அடி உயரத்தில் திரிஷூல் மலை முகட்டில் இருக்கும் ரூப்குண்ட் மற்றொரு புகழ்பெற்ற மலையேற்ற பாதையாகும். மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குண்டில் 300க்கும் அதிகமான மிருகங்கள் மற்றும் மனிதர்களின் இறந்த உடல்கள் மூழ்கிக் கிடக்கின்றன.
அதிகபட்ச குளிரால் அழுகாமல் பாதுகாப்பாக இருக்கும் இவ்வுடல்களை ஏரி உருகும் தருணங்களில் நாம் காணலாம். கெளரி பாதை, தேவி தேசிய பூங்கா, காலிந்தி கால் மலையேற்றப் பாதை மற்றும் கன்குல் மலையேற்றப் பாதை ஆகியவை இங்கிருக்கும் மற்ற மலையேற்றப் பாதைகளாகும். ஃபிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மலையேற்றத்திற்கு தகுந்த மாதங்களாக கருதப்படுகிறது.