மலையேற்றம், ஸ்கையிங், கேம்ப்பிங், பாராகிளைடிங் மற்றும் ஹேண்ட் கிளைடிங் போன்ற விளையாட்டுகளுக்கு மிகவும் பொருத்தமான இயற்கையமைப்பை பெற்றுள்ள இடம் தான் ரொஹ்ருவில் உள்ள பாப்பர் பள்ளத்தாக்கு.
மகாஷீயருக்கும், நன்னீர் மீன்பிடிப்பிற்கும் புகழ் பெற்ற பாப்பர் நதியின் கரைகளில் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையிலான நாட்கள் பாப்பார் பள்ளத்தாக்கில் மீன் பிடிக்க ஏற்றதாகும்.
இந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஏரிகள், தெளிந்த நீரோடைகள் மற்றும் மலைகளால் இந்த இடம் அழகு பெற்று திகழ்கிறது. சன்சால் மலையேற்றம் மற்றும் குபேர் பள்ளத்தாக்கு மலையேற்றம் ஆகியவை இங்கே புகழ் பெற்ற மலையேற்றங்களாகும்.
இங்கிருக்கும் சுற்றுலா முகவர்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான விளையாட்டு தொடர்பான திட்டங்களை பெற்றிட முடியும். டெண்ட் அடித்து தங்குவதற்கான வசதிகளும் இங்கே கிடைக்கிறது. இங்கே கிடைக்கும் ஜீப் சவாரியின் மூலம் இந்த பகுதிகளை எளிதில் சுற்றிப் பார்த்திட முடியும்.