Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சபரிமலை » ஈர்க்கும் இடங்கள் » மகரவிளக்கு

மகரவிளக்கு, சபரிமலை

17

மகரசங்கராந்தி திருவிழாவின் போது ஐயப்பன் கோயிலில் பிரசித்தமாக கொண்டாடப்படும் பூஜைச்சடங்கு இந்த மகர விளக்கு பூஜையாகும். இந்த பூஜைத்திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் யாத்ரீக பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஜனவரி 14ம் தேதி இந்த மகரவிளக்கு சடங்கு அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணங்கள் நிறைந்த பெட்டிகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன.

இந்த திருவாபரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திரண்டு வருகின்றனர். மிகுந்த கோலாகலத்துடன் வாண வேடிக்கை செண்டை வாத்திய மங்கல ஆர்ப்பரிப்புகளோடு இந்த திருவாபரணப்பெட்டிகள் பந்தள ராஜ அரண்மனை பிரதிநிதிகளால் தலை மேல் சுமந்து மணிகண்டன் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீ ஐயப்பனின் ஆலயத்திற்கு எடுத்துவரப்படுகிறது. ஊர்வலத்தில் கொண்டுவரப்படும் ஆபரணப்பெட்டிகளை தரிசிக்க பக்தர்களும் உள்ளூர் மக்களும் பெருமளவில் திரள்கின்றனர்.

ஏழு நாள் நீடிக்கும் மகரவிளக்கு பூஜைத்திருவிழாவானது குருத்தி எனும் சடங்குடன் முடிவு பெறுகிறது. காட்டுத்தேவதைகள் மற்று தெய்வங்களை சாந்தப்படுத்துவதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது.

இந்த இறுதி நாளில் மகர நட்சத்திரம் வானில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க விசேஷமாகும். மகரவிளக்கு பூஜைத்திருவிழாவானது ஒரு அற்புத ஆன்மீக அனுபவத்தை பக்தர்களுக்கும் யாத்ரீகர்களுக்கு அளிக்கிறது. மனம், ஆன்மா மற்றும் உடல் ஆகிய மூன்றுக்குமே புத்துணர்ச்சியை அளிக்கும் ஒரு தரிசனமாக இது அமையும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri