Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சபரிமலை » வானிலை

சபரிமலை வானிலை

வருடம் முழுதுமே இதமான குளுமையான பருவநிலையை கொண்டிருப்பதால் எல்லா நாட்களிலும் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான இடைப்பட்ட மாதங்களில் இம்மலைப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது. இவை மழைக்கு பிந்தைய மற்றும் கோடைக்கு முந்தைய பருவத்தை உள்ளடக்கிய மாதங்களாகும். நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை ஐயப்பன் கோயில் நாள் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது.

கோடைகாலம்

சபரிமலை பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கிறது. முடிவடைகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 34° C வரை வெப்பநிலை உயர்கிறது. கோடையில் வெப்பமும் வறட்சியும் நிலவினாலும் பயணத்துக்கு சிரமமாகவோ அசௌகரியமாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை சபரிமலையில் மழைக்காலம் நிலவுகிறது. மழையில் நனைந்து ஜொலிக்கும் காட்டுப்பகுதியின் அழகை தரிசிக்க விரும்புபவர்கள் இக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்ளலாம். கடுமையான மழைப்பொழிவின் மூலம் கழுவப்பட்டவை போன்று காட்சியளிக்கும் மலைகள் மற்றும் பச்சை மெத்தைகள் போன்ற தாவரச்செழிப்பு போன்றவற்றை இக்காலத்தில் ரசிக்கலாம்.

குளிர்காலம்

சபரிமலைப்பகுதியில் நவம்பரில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இனிமையான மற்றும் மிதமான பருவநிலையுடன் காணப்படும் இந்த குளிர்காலம் மிகவும் உகந்ததாக காட்சியளிக்கிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கியமான திருவிழாக்கள் யாவுமே இப்பருவத்தில் கொண்டாடப்படுவதால் இப்பருவமே சபரிமலைப்பயணத்துக்கு ஏற்றதாக திகழ்கிறது. இக்காலத்தில் அதிகபட்சம் 32° C மற்றும் குறைந்தபட்சம் 17° C வெப்பநிலை நிலவுகிறது.