சஜனின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான பேஷ்வா கோயில், அதன் வரலாற்று சிறப்புக்காகவும், மரபுக்காகவும் பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. சஜன் கிராமப் பகுதியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் உச்சியில் இந்த கோயில் அமைந்திருக்கிறது.
இந்த கோயில் தனிமையாக காணப்பட்டாலும், இதன் அருகில் ஒரு சிறு அணையும், அதற்கருகில் புலம் பெயர் பறவைகளை ஏராளமாக கொண்ட அடர்ந்த வனம் ஒன்றும் உள்ளது.
இக்கோயிலை அடைவது கடினமான காரியமாதலால் இங்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருக்கும். எனினும் இந்த புனித ஸ்தலம் தனது தனித்துவத்தையும், சிறப்பையும் காப்பாற்றி வருகிறது.