Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாபுதாரா » வானிலை

சாபுதாரா வானிலை

ஆண்டு முழுவதும் இங்கு மிகவும் ரம்மியமான காலநிலை நிலவுகிறது. கோடைக்காலங்கள் மிதமான வெப்பத்தோடும், குளிர்காலங்கள் நம்மை சுற்றுலாவுக்கு அழைக்கும் இதமான குளிராகவும் உள்ளன. மழைக்காலங்களில் அளவாக மழை பெய்து சுற்றுலாப்பயணத்தை இனிமையாக்குகின்றன.

கோடைகாலம்

ஆண்டு முழுவதும் சாபுதாராவில் மிகவும் ரம்மியமான காலநிலை நிலவுகிறது. எனவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதற்கு எந்தக் காலத்தையும் தேர்ந்தெடுக்கலாம். மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில், வெப்பநிலையானது 28° C முதல்  38° C வரை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை சாபுதாராவில் மழைக்காலம் ஆகும். இப்பருவத்தில் சராசரியான  மழைப் பொழிவு உள்ளது.

குளிர்காலம்

சாபுதாராவில் குளிர்காலமானது மிகமிக இனிமையானதாகும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான குளிர்காலத்தில் வெப்பநிலையானது, 8° C முதல் 28° C  வரை இருக்கும்.