Search
  • Follow NativePlanet
Share

சர்ச்சு - முகாமிட்டு களிப்போம் இன்பம்!

12

இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லைகளில், கடல் மட்டத்திலிருந்து 4290 மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்ச்சு என்ற சுற்றுலாத்தலம் சர் பும் சுன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதன் தெற்கில் பரலச்சா லா-வும் மற்றும் வடக்கில் லாஹுலுங் வா-வும் அமைந்துள்ளன. மணாலியில் இருந்து லே- செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவு தங்கிச் செல்லக் கூடிய ஓய்விடமாக சர்ச்சு இருக்கிறது; இவ்விரண்டு இடங்களும் சுமார் 475 கிமீ இடைவெளிகளில் அமைந்துள்ளன.

குளிர்காங்களில் பனி மூடியிருக்கும் இந்த நெடுஞ்சாலைகளில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியாது. பனி உருகி ஓடும் காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் இந்த பாதை போக்குவரத்திற்காக திறந்து விடப்படும்.

லே-மணாலி நெடுஞ்சாலையிலுள்ள இவ்விடத்தை, இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஓய்விடமாகவும், இடைநிறுத்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இடத்திற்கு அருகிலிருக்கும் சாரப் சு ஆற்றுக்கு அருகிலேயே இந்திய இராணுவத் தளம் ஒன்றும் உள்ளது.

ஜுன் முதல் அக்டோபர் மாதங்களில் இப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடாரங்களில் தங்கும் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். இந்த கூடாரங்களில் சுவையான உணவுகளும் கிடைக்கும். லடாக்கில் உள்ள ஸன்ஸ்கார் பகுதிகளில் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு அருமையான தளமாக சர்ச்சு விளங்குகிறது.

சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு கோடை காலத்தில் வருவது நல்லது. கோடைக்காலத்தில் சராசரி வெப்பநிலை 25°C ஆக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக உள்ளது.

சர்ச்சுவில் ஜுன் மாதத்தில் தொடங்கும் சுற்றுலா சீசன் அக்டோபர் மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நெடுங்சாலை வழியும், ஓய்விடங்களும் குளிர்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்தின் இறுதியில் பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டு விடும். இந்நாட்களில் இவ்விடத்தின் வெப்பநிலை -35°C வரையிலும் குறைந்து விடும்.

சர்ச்சுவிற்கு விமானம் மூலம் செல்வதற்கு 255 கிமீ தொலைவில் உள்ள லே விமான நிலையத்தை பயன்படுத்தலாம். லே விமான நிலையம் புது டெல்லி, மும்பை, சண்டிகார், திருவனந்தபுரம், கோவா ஆகிய பிற இந்திய நகரங்களுக்கு விமான வசதிகள் உள்ளன.

இந்த விமான தளத்திற்கு வெளியிலேயே, சர்ச்சுவை அடைவதற்கான தனி மற்றும் ஷேர் டாக்ஸிகளை சுற்றுலாப் பயணிகள் எளிதில் அமர்த்திக் கொள்ள முடியும். மேலும், இந்த சுற்றுலா தலத்தை சுற்றுலாப் பயணிகள் 550 கிமீ தூரத்திலுள்ள ஜம்மு இரயில் நிலையத்திலிருந்தும் அடையலாம்.

சாலைப் போக்குவரத்தின் மூலமாக வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளைப் பயன்படுத்தியும், மணாலியிலிருந்து டாக்ஸிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டும் செல்லலாம்.

சர்ச்சு சிறப்பு

சர்ச்சு வானிலை

சிறந்த காலநிலை சர்ச்சு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சர்ச்சு

  • சாலை வழியாக
    சர்ச்சு சுற்றுலாத்தலம் மணாலி மற்றும் லே-வுடன் சாலை வழியில் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. சாலை வழியாக பேருந்து செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மே முதல் செப்டம்பர் மாதங்களில் பேருந்து வசதிகளைப் பெற முடியும். மேலும், சுற்றுலாப் பயணிகள் மணாலியிலிருந்து தனியார் வாகனங்களையும் அமர்த்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    581 கிமீ தொலைவிலிருக்கும் ஜம்மு இரயில் நிலையம் சர்ச்சுவிற்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் மும்பை, புது டெல்லி, சண்டிகர், திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களுடன் சிறப்பாக இணைக்கப் பட்டுள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சர்ச்சு செல்ல சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை அமர்த்திக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    255 கிமீ தொலைவிலிருக்கும் லே விமான நிலையம் தான் சர்ச்சுவிற்கு அருகிலிருக்கும் விமான நிலையமாகும். முன்னணி விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா, கிங்பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் லே-விற்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன. இந்த விமான நிலையம் மும்பை, புது டெல்லி மற்றும் புனே போன்ற பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், பருவநிலை மிகவும் மோசமாக இருக்கும் காலங்களில் விமான சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படவோ வாய்ப்புகள் உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat

Near by City