Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சரிஸ்கா » ஈர்க்கும் இடங்கள் » பன்கர் கோட்டை

பன்கர் கோட்டை, சரிஸ்கா

25

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் இந்த பன்கர் கோட்டை எனும் புராதன கோட்டை உள்ளது. ஆம்பேர் நகரைச் சேர்ந்த கீர்த்தி பெற்ற முகலாய தளபதியான மான் சிங் என்பவரின் மகன் மாதவ் சிங் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சுவரும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த கோட்டை வளாகத்தில் இயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், பூங்காத்தோட்டங்கள், ஹவேலிகள் மற்றும் ஆல மரங்கள் போன்றவை காணப்படுகின்றன. ஒரு மலையுச்சியில் அமைந்திருக்கும் சாத்ரி மாடமும் இவற்றை விட்டு விலகி காணப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக இந்த கோட்டைப்பகுதியை மக்கள் ஒரு சபிக்கப்பட்ட மர்மமான ஸ்தலமாகவே கருதி வந்துள்ளனர். இப்பகுதியின் மன்னரான அஜப்சிங் ‘அவரது தாத்தா மாதவ் சிங் என்பவர் பாபா பாலநாத் எனும் யோகிக்கு அளித்திருந்த சத்திய உடன்பாட்டை’ உதாசீனப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பாபா பாலநாத் யோகி அஜப்சிங்கை சபித்து விட்டதாக கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த சாபத்தின் விளைவாகவே பன்கர் கோட்டையானது இருண்டுபோய், மக்கள் வசிக்காத பாழடைந்த நகர ஸ்தலமாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இந்தியத்தொல்லியல் துறைகளின் அகழ்வாராய்ச்சி சான்றுகளின்படி இந்தக்கோட்டை வரலாற்றுக்காலத்துக்கு முந்தையதாக சொல்லப்படுகிறது. பயணிகளின் மனநலன் கருதி இந்த மர்மமான கோட்டைப்பகுதிக்குள் இருட்டியபிறகு யாரும் நுழையாதவாறு தொல்லியல் துறை தடை செய்துள்ளது. அந்த அளவுக்கு ஒரு அமானுஷ்யமான சூழல் இந்த கோட்டை ஸ்தலத்தில் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed