Search
  • Follow NativePlanet
Share

சட்னா - இந்தியாவின் சிமெண்ட் நகரம்!

12

இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஏராளமான சிறந்த நகரங்கள் பல அமைந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய நகரம் சட்னா ஆகும். சட்னா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் ஆகும். சமயம் சார்ந்த புராணங்களுக்கும் சட்னா ஒரு முக்கிய மையாமாக அமைந்திருக்கிறது.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த சட்னா நகரம் கோயில்களுக்கும், சுற்றுலாத் தளங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. சட்னாவின் இன்னொரு சிறப்புப்பான காரியம் என்னவென்றால், சிமென்ட் உற்பத்தியில் சட்டனா ஒரு முக்கியமான மாவட்டமாக திகழ்ந்து வருவதாகும்.

சட்னாவைச் சுற்றிலும் பல சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இவை சட்னாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கைச் செய்து வருகின்றன.

சட்னாவைச் சுற்றியுள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள்

பண்டைய சமயம் மற்றும் பண்பாடு ஆகிய கலந்த கலவையை சட்னா மாவட்டம் வைத்திருக்கிறது. சித்ரகூட் தாம் மற்றும் மைஹர் ஆகிய ஆலயங்கள் சட்னாவின் மிக முக்கிய சமயத் தலங்கள் ஆகும்.

அதோடு தவாரியில் இருக்கும் சாய்பாபா மந்தீர், சாரதாதேவி ஆலயம் மற்றும் வெங்கடேஷ் ஆலயம் ஆகியவையும் சட்னாவில் இருக்கும் மிக முக்கிய சமயத் தலங்கள்.

சமயத் தலங்களைத் தவிர்த்து மதவகர் கோட்டை, கிதாகூட் மற்றும் ஜுகட்டேவ் டலப் போன்ற சுற்றுலாத் தளங்களும் சட்னாவின் மிக முக்கியமான அம்சங்களாகும்.

அவற்றோடு சேர்த்து போகா-ஜலேபி, லோட்டன் கி முங்காடி மற்றும் டகி வடா போன்ற உணவு வகைகளை சட்னா செல்லும் சுற்றுலா செல்லும் பயணிகள் கண்டிப்பாக சாப்பிட்டு வரவேண்டும்.

சட்னாவுக்குச் செல்ல தகுந்த காலம்

சட்னாவில் எல்லாவகையான பருவ காலங்களும் உள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில் சட்னாவில் மிகவும் இதமான வெப்பநிலை நிலவும். எனவே அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்களில் சட்னாவுக்கு சென்று வருவது சிறப்பாக இருக்கும்.

சட்னாவுக்குச் செல்ல போக்குவரத்து வசதி

சட்னாவுக்குச் செல்ல எல்லா வகையான போக்குவரத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக சட்னாவில் ஒரு மிகச் சிறிய விமான நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. அதோடு சட்னாவிற்கு அருகில் உள்ள ஜபல்பூரில் ஒரு பெரிய விமான நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

அங்கிருந்து பேருந்துகள் அல்லது டாக்ஸிகள் மூலம் சட்னா செல்ல முடியும். மேலும் தொடர்வண்டி மற்றும் பேருந்து வசதிகள் முதலியவை சட்னாவில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

சட்னா சிறப்பு

சட்னா வானிலை

சிறந்த காலநிலை சட்னா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சட்னா

  • சாலை வழியாக
    சட்னாவில் ஒரு பெரிய பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. மத்தியப்பிரதேச மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் அரசுப் பேருந்துகள் சட்னாவிற்கு பெருமளவில் இயக்குப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் 75 ஆகியவற்றோடு சட்னா இணைக்கப்பட்டுள்ளதால், ஜபல்பூர், போபால், இந்தூர், ரீவா, அலகாபாத் மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் இருந்து சட்னாவிற்கு பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சட்னாவிலேயே ஒரு பெரிய தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு ஏராளமான தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சட்னாவில் மிகச் சிறிய விமான நிலையம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த விமான நிலையத்திற்கு ஏராளமான விமானங்கள் வருவதில்லை. ஆனால் சட்னாவிற்கு 220 கிமீ தொலைவில் ஜபல்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களில் இருந்து ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே ஜபல்பூர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை டாக்ஸிகள் மூலம் சட்னாவிற்கு மிக எளிதாகச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri