பன்னிலால் சவுக் என்ற பகுதி சட்னா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சன்ட்னி சவுக் பகுதி அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். சட்னாவின் மிக முக்கிய சந்தைப் பகுதியாக பன்னிலால் சவுக் அமைந்திருக்கிறது. ஒரு நாளின் பெரும்பாலான நேரம் பன்னிலால் சவுக் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கும்.
மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பெரும்பாலும் பன்னிலால் சவுக்கிற்கு வந்து செல்வர். பன்னிலால் சவுக்கில் உள்ள கடைகள் மிகவும் வரிசையாக இருக்கும்.
அதோடு இந்த சவுக்கில் ஏராளமான உணவு விடுதிகள் உள்ளதால், இந்த உணவு விடுதிகளில் மிகவும் ருசியான மற்றும் பல்வேறு வகையான உணவுகளை வாங்கி சாப்பிட முடியும். குறிப்பாக லசி மற்றும் போகா ஜலேபி போன்றவை இந்த சவுக்கில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகள் ஆகும்.