Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சேனாபதி » வானிலை

சேனாபதி வானிலை

சேனாபதி மாநகராட்சிக்கு வர விரும்புபவர்கள் அக்டோபர் அல்லது நவம்பர் ஆரம்பத்தில் வருவதே சிறந்தது. இந்தப் பருவத்தில் இந்த இடம் அனைத்தும் பச்சை பசுமையாக காட்சி அளிக்கும். சில பயணிகள் இங்கு வருவதற்கு கோடைக்காலத்தையும் தேர்ந்தெடுப்பர். அந்த நேரத்தில் வானிலை இனிமையாக இருக்கும். குளிர் காலத்தில் கடுமையான குளிர் நிலவுவதால், அவைகளை சந்திக்க நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே அந்நேரத்தில் இங்கு வாருங்கள்.

கோடைகாலம்

கோடைக்காலம் இங்கே மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் தட்ப வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இருப்பினும் இந்த இடம் உயரத்தில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் குளிர்ந்த வானிலை நிலவும். இந்த நேரத்தில் சில நேரம் மழையும் பெய்யக்கூடும்.

மழைக்காலம்

ஜூலை முதல் அக்டோபர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் இங்கே அதிக அளவு மழை பெய்யும். சராசரியாக இந்த நேரத்தில் ஒவ்வொரு மாதத்திலும் 150-200 மி.மீ. அளவு மழை பெய்யும். ஜூலை மாதம் தான் மிகவும் ஈரப்பதம் உள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதோடு இந்த நேரத்தில் சில பருவகால செடிகள் பூத்துக் குலுங்கும்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கும் குளிர் காலம், மற்ற வட கிழக்கு பகுதிகளை போல் மிகவும் கடுமையாக இருக்கும். இந்த நேரம் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இறங்கும். டிசம்பர் மாதம் தான் இங்கு கடும் குளிர் உணரப்படும். ஜனவரியிலிருந்து பிப்ரவரி வரை இங்குள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் குளிர்ந்த தென்றல் வீசும்.