அல்சிஸார் மற்றும் மல்சிஸார் ஆகிய இரண்டும் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுநகரங்களாகும். 18ம் நூற்றாண்டின் மத்திய மற்றும் இறுதிப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவை ஷேக்ஹாவதி பகுதியின் வடதுருவத்தில் அமைந்துள்ளன.
இங்கு காணப்படும் தனித்தன்மையான ஃபிரஸ்கோ சுவரோவியங்களுக்கும் வண்ணமயமான மை ஓவியங்களுக்கும் இவை பிரசித்தி பெற்றுள்ளன. மேலும், பல வண்ணங்களில் பிரகாசிக்கும் ஹவேலி மாளிகைகளுடன் ராஜஸ்தானிய கலை வேலைப்பாடு மற்றும் கட்டுமான அம்சங்களுடன் காட்சியளிக்கும் கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களையும் இங்கு காணலாம்.
ஜுஞ்ஜுனு நகரத்திலிருந்து 27கி.மீ தொலைவில் அல்சிஸார் அமைந்துள்ளது. பலவண்ணம் கொண்ட ஹவேலிகள் மற்றும் கோட்டைகள் இங்கு உள்ளன. ஷீ லால் பஹதூர் மால் கி ஹவேலி, தேஜ்பால் ஜுஞ்ஜுன்வாலா கி ஹவேலி, லக்கா கா கி ஹவேலி, மஹலி தத், கேதன் ஹவேலி, தாக்குர் சோட்டு சிங் செனடாப், ஸ்ரீ லால் பஹதூர் மால் கிணறு மற்றும் ஜீவன் ராம் மராடியா கா தலாப் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களை இங்கு பயணிகள் காணலாம்.
மல்சிஸார் எனும் சிறிய கிராமம் ஜுஞ்ஜுனு நகரத்திலிருந்து 32கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் பிரேம் கிரி ஜி கா மடம், பனார்ஷி தாஸ் பங்கா ஹவேலி, செர்ஹ் மால் சரோஹி ஹவேலி, பங்கா கிணறு, ஜோக்கி ராம் கிணறு மற்றும் சரோகி கிணறு ஆகிய முக்கியமான சுற்றுலா அம்சங்களை பார்க்கலாம்.