Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷேக்ஹாவதி » வானிலை

ஷேக்ஹாவதி வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமே ஷேக்ஹாவதி பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலையானது இனிமையான சூழல் மற்றும் குளுமையுடன் காணப்படுகிறது. மேலும் இங்கு பாலைவனத்திருவிழாவும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுவதால் பிப்ரவரி மாதத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): ஷேக்ஹாவதி பிரதேசத்தில் எல்லா ராஜஸ்தான் பகுதிகளைப் போலவே கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தை பெற்றுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கி மே வரையிலான கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 27° C முதல் அதிகபட்சமாக 43° C வரை வெப்பநிலை நிலவுகிறது. எனவே கோடைக்காலத்தில் ஷேக்ஹாவதிக்கு விஜயம் செய்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): ஷேக்ஹாவதி பிரதேசம் இயற்கையாகவே அதிக அளவு மழைப்பொழிவை பெறுவதில்லை. எனவே, இக்காலத்தில் மிதமான அவ்வப்போதைய மழைப்பொழிவு மட்டுமே காணப்படுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): ஷேக்ஹாவதி பிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 10° C முதல் 35° C வரை நிலவுகிறது. குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் ஷெகாவாடிக்கு இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.