துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த துங்கா அணை பயணிகளை வசீகரிக்கும் ஒரு அம்சமாக வீற்றிருக்கிறது. 535 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணைக்கு அருகிலேயே 3 கி.மீ தூரத்தில் சக்ரேபாயுலு யானைப்பயிற்சி முகாமும் அமைந்திருக்கிறது.
தீர்த்தஹள்ளியிலிருந்து ஷிமோகா செல்லும் வழியில் குஜனூர் எனும் இடத்தில் இந்த துங்கா அணை அமைந்திருக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் இந்த அணைப்பகுதி ஷிமோகா மாவட்டத்திலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதுபோக்க இது மிகவும் ஏற்றது.
ஷிமோகாவிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த துங்கா அணை அமைந்துள்ளது. ஷிமோகாவிலிருந்து தீர்த்தஹல்லி செல்லும் வழியில் 20 நிமிடப்பயணத்திலேயே இந்த அணைப்பகுதியை அடைந்துவிடலாம்.
உள்ளூர் போக்குவரத்து வசதிகளும் துங்கா அணைக்கு இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள ரயில் நிலையம் 12 கி.மீ தூரத்தில் ஷிமோகா பிரதான நகரத்தில் அமைந்துள்ளது.