Search
  • Follow NativePlanet
Share

சிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்!

19

சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். 

சிப்சாகர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம். கிட்டதட்ட100 ஆண்டுகளுக்கு சிப்சாகர் நகரம், அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியிருக்கிறது.

இங்கு 129 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு செயற்கையான நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இதற்கு சிப்சாகர் தொட்டி என்று பெயர். இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி தான் சிப்சாகர் நகரம் அமையப்பெற்றுள்ளது.

சிப்சாகர் நகரில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அஹோம் சாம்ராஜய காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த நினைவுச் சின்னங்கள் சிப்சாகர் நகரின் பெருமிதமாக விளங்குகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக இருந்த சிப்சாகர், இப்பொழுது எண்ணெய் வளம் தேயிலை வளம் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல தலங்கள் இங்கு உள்ளன.

சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக, அஹோம் சாம்ராஜ்யத்தினர், அசாமை ஆட்சி புரிந்திருக்கின்றனர். பிறகு, 1817-ஆம் ஆண்டு பர்மா நாட்டவர்களால் அஹோம் சாம்ரஜ்யம் வீழ்ந்தது.

அதன் பிறகு, சிப்சாகர் பிரிட்டிஷ் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், நிர்வாக சீரமைப்பிற்காக, சிப்சாகர் மூன்று துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

சிப்சாகரை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சிப்சாகர் நகரம், வெகுகாலமாக அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்ததால், அஹோம் தொடர்பான நினைவுச் சின்னங்களை இங்கு அதிகமாக காண முடிகிறது. மிக பிரம்மாண்டமான சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டி சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் இடமாகும்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தத் நீர்தேக்கத் தொட்டி, நகரின் உயரத்தைவிட அதிகமாக இருக்கிறது. மேலும், சிவ டால், விஷ்ணு டால் மற்றும் தேவி டால் என்ற மூன்று முக்கிய கோவில்கள் இங்கு உள்ளன. 1734-ஆம் ஆண்டு ராணி மாதாம்பிகா, இந்த மூன்று கோவில்களையும் கட்டினார்.

சிப்சாகரை சுற்றிப் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தளதாள் கர், கரேங் கர் மற்றும் கர்காவோன் அரண்மனை போன்றவை சிப்சாகர் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகளாகும்.

7 மாடிகளைக் கொண்ட அரண்மனையின் கீழ்தளத்தை தளாதள் கர் என்பர். இங்கு இரண்டு ரகசிய சுரங்கப்பாதைகள் உள்ளன. அதற்கு மேலே உள்ள மாடிகளை கரேங் கர் என்பர். சிப்சாகர் நகரில், ரங் கர் எனும் பெரிய அரங்கம் உள்ளது.

இதன் மேற்கூரை, தலைகீழாக இருக்கும் படகினைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்சாகர் செல்லும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.

சிப்சாகர் நகரை அடைவது எப்படி?

சிப்சாகர் செல்ல சாலை வசதி சிறப்பாக உள்ளதால், பேருந்து அல்லது கார் மூலம் எளிதில் செல்ல முடியும். சிப்சாகரில் இருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிமால்குரி ரயில் நிலையம். சிப்சாகரில் விமான நிலையம் இல்லை. ஆனால், 55 கிமீ தொலைவில் இருக்கும் ஜோர்ஹாட்டில் விமான நிலையம் உள்ளது.

சிப்சாகரின் வானிலை

சிப்சாகர் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்திலும் செல்லலாம். மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம் சிப்சாகர். இங்கு வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியசும் இருக்கும்.

சிப்சாகர் சிறப்பு

சிப்சாகர் வானிலை

சிறந்த காலநிலை சிப்சாகர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிப்சாகர்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 37 , சிப்சாகர் - திப்ருகர் நகரை ஒட்டிச் செல்கிறது. தேயிலை வியாபாரிகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் பிரதான சாலையாக தேசிய நெடுஞ்சாலை 37 திகழ்கிறது. ஆகையால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சாலை வழியாக எளிதில் சிப்சாகர் வர முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிப்சாகரில் இருந்து 17.4 கிமீ தொலைவில் சிமால்குரி எனும் நகரில் ரயில் நிலையம் உள்ளது. குவஹாத்தி - திபுருகர் வழித்தடத்தின் இடையே சிமால்குரி அமைந்திருப்பதால், பல்வேறு ரயில்கள் இந்த நிலையத்திற்கு வருகின்றன. ரயில் நிலையத்திலிருந்து கார் அல்லது பேருந்து மூலமாக சிவசாகர் நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிப்சாகர் நகரில் இருந்து 63.6 கிமீ தொலைவில் உள்ள ஜோர்ஹாட் நகரில் விமான நிலையம் உள்ளது. குவஹாத்தி, கொல்கத்தா மற்றும் சில்ச்சாரிலிருந்து பல விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜோர்ஹாட் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சிப்சாகர் நகரை எளிதில் அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed