Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்வாஸா » ஈர்க்கும் இடங்கள் » ‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’

‘டிரைபல் கல்ச்சுரல் மியூசியம்’, சில்வாஸா

22

டிரைபல் கல்ச்சுரல் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் தாத்ரா &  நகர் ஹவேலி பிரதேசம் மற்றும் அதன் பூர்வ குடி மக்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை நாகரிகம், சடங்குகள், கலாச்சாரம் போன்றவை குறித்த தகவல்களை அளிக்கும் அற்புதக்காட்சிக்கூடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

நகரின் மையத்திலேயே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயில் அழகான உள்ளூர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முற்றத்தில் தானியங்களை தூற்றியபடி காட்சியளிக்கும் பழங்குடி மக்களின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

சிலையா அல்லது உயிருள்ள மனிதர்களாக என்ற சந்தேககத்தில் தொட்டுப்பார்க்கும் ஆவல் தோன்றும் அளவிற்கு இவை தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள காட்சிக்கூடங்களில் நுழைவதற்கு முன்னர் பார்வையாளர்கள் தங்கள் பாத அணிகளை கழற்றிவிட்டு செல்ல வேண்டியிருக்கிறது. பழங்குடி மக்களின் நாகரிகம் சார்ந்த அம்சங்கள் பல்வேறு வடிவங்களில் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்களின் ஆபரணங்கள், வீட்டுப்பொருட்கள், சமையல் பாத்திரங்கள், மீன்பிடி கருவிகள், விவசாயம் மற்றும் வேட்டைக்கான உபகரணங்கள் ஆகியவற்றோடு இசைக்கருவிகள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

அவர்களின் தினசரிப்பணிகள் குறித்த மாதிரி அமைப்புகள் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வசதியாக கலையம்சத்தோடு அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் சுவர்களில் குறுவாட்கள், ஈட்டிகள், வில், அம்பு, பழங்கால குழல் துப்பாக்கி, உறைவாள், கேடயம், கவசங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை மட்டுமல்லாமல் சமூகச்சடங்குகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் திருமண உடையலங்காரங்கள் குறித்த புகைப்படங்களையும் இங்கு பார்க்கலாம்.

துப்லா இனத்தார் ஆடும் கெரியா நடனம், முகமூடிகள் அணிந்த கொக்னாஸ் நடனக்கலைஞர்கள், தோல் நடனக்கலைஞர்கள் மற்றும்  பிரமிடு நடனமாடும் துர் நடனக்கலைஞர்கள் போன்றோரின் புகைப்படங்களை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat