சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூரிலிருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இடம் இந்த வேலப்பூர் ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஒன்று இந்த கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
ஹேமந்த்பந்தி பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் புராதன கட்டிடக் கலை அழகுடன் மிளிர்கிறது.இந்த கோயிலை ஒட்டி 20 நினைவுச்சின்னக் கற்கள் காணப்படுகின்றன.
இந்த கோயிலுக்கு அருகிலேயே ஹர நரேஷ்வரா கோயில் என்னும் பிரசித்தி பெற்ற மற்றொரு கோயிலும் உள்ளது. இந்த கோயிலில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய படிக்கட்டுகளைக் கொண்ட குளம் ஒன்று உள்ளது.
இந்த கிராமத்தில் இன்னும் ஏராளமான பழைய கட்டிட அமைப்புகளும் நினைவுச்சின்னங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகின்றன.
வேலப்பூர் கிராமத்தை சோலாப்பூர் நகரத்திலிருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ பேருந்து மூலம் அடையலாம்.