Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்பிதி » வானிலை

ஸ்பிதி வானிலை

ஸ்பிதி சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்து ரசிக்க விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது. இக்காலத்தில் இனிமையான  குளுமையான சூழல் நிலவுகிறது. இக்காலத்தில் எல்லா மலைப்பாதைகளும் போக்குவரத்திற்கு திறக்கப்படுகின்றன.

கோடைகாலம்

(மே முதல் அக்டோபர் வரை) : ஸ்பிதி சுற்றுலாத்தலத்தில் மே முதல் அக்டோபர் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. ஸ்பிட்டிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள இப்பருவமே மிகவும் உகந்ததாக உள்ளது. மேலும் இக்காலத்தில் எல்லா மலைப்பாதைகளும் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இக்காலத்தில் சராசரியாக 15°C என்ற அளவில் வெப்பநிலை காணப்படுகிறது. எனவே வெளிச்சுற்றுலாவுக்கு இப்பருவம் மிகவும் பொருத்தமாக விளங்குகிறது.

மழைக்காலம்

ஸ்பிதி சுற்றுலாத்தலம் மழைநிழல் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் மழைப்பொழிவு இப்பகுதியில் இல்லை. பொதுவாக இப்பருவத்தில் வறண்ட சூழல் காணப்படுவதோடு பகலில் வெப்பமும் இரவில் குளிரும் நிலவுகிறது.

குளிர்காலம்

( நவம்பர் முதல் ஏப்ரல் வரை) : ஸ்பிதி சுற்றுலாத்தலத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் ஏப்ரல் வரை நீடிக்கிறது. மேற்குப்பகுதியின் புவியியல் அம்சங்களின் தாக்கத்தினால் இங்கு கடுமையான பனிப்பொழிவு இக்காலத்தில் நிலவுகிறது. வெப்பநிலையும் 0°C க்கு கீழே குறைந்து காணப்படுகிறது.