Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » வானிலை

ஸ்ரீநகர் வானிலை

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களே ஸ்ரீ நகருக்கு வர மிகவும் ஏற்ற பருவமாக கருதப்படுகின்றன. ஸ்ரீ நகரில் கோடைக்காலம் மிகவும் இனிமையாகவும், குளிர்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும். எனினும், பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் பனிப்பொழிவினை அனுபவிப்பதற்காகவே குளிர்காலத்தில் ஸ்ரீ நகருக்கு வருகிறார்கள். கோடைக்காலங்களில் இங்கிருக்கும் மலைச் சிகரங்கள் அற்புதமான காட்சிகளை தரவல்லதாக இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கோடைக்காலத்தில் ஸ்ரீ நகரின் பருவநிலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் 33°C-ஆக இருக்கும் வெப்பநிலை இரவு நேரங்களில் சுமார் 10°C வரையிலும் கூட குறைந்து விடும். கோடைக்காலத்தில் ஸ்ரீ நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இங்கிருக்கும் ஏரிகளும், தோட்டங்களும் சுற்றுலாப் பயணிகளை கோடைக்காலத்தில் தங்களிடம் கவர்திழுக்கும்.

மழைக்காலம்

குளிர்காலம்

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான மாதங்களில் ஸ்ரீ நகரில் குளிர்ச்சியான குளிர்காலம் நிலவி வரும். இந்நாட்களில் 0°C-க்கும் செல்லும் வெப்பநிலை அதிகபட்சமாக 15°C ஆக மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பனிப்பொழிவினை அனுபவிப்பதற்காகவே இந்நாட்களில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீ நகருக்கு வருவார்கள். மேலும், இந்நாட்களில் கண்ணெதிரே நின்று கொண்டிருக்கும் பனி மூடிய சிகரங்கள் மற்றும் மலைகள் காண்பவரை மலைக்கச் செய்து விடும்.