Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சுவாமிமலை » வானிலை

சுவாமிமலை வானிலை

அனைத்து காரணிகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும் பொழுது, அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், இங்கு சுற்றுலா வருவது மிகச் சிறந்தது. அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது கண்டு ரசிக்கக்கூடிய திருவிழாவாகும். மேலே குறிப்பிடப்பட்ட திருவிழாக்கள் அனைத்துடனும் கூடிய குளிர்காலம் சுவாமிமலைக்கு சுற்றுலா வருபவர்கள் தமது பயணத்தை மிகவும் அனுபவித்து ரசித்து இன்புறும் காலமாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரையான காலத்தில், வெப்பநிலையானது 30°C முதல் 39°C வரை இருக்கும். சுற்றுலாப்பயணிகள் வெப்ப மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அனல் பறக்கும் கோடையானது பயணத்தைக் கடினமானதாக்கி சுவாமிமலைக் கோவில்களின் வனப்பை ரசிக்க இயலாதபடி செய்து விடும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் வழக்கமாக மிதமான மழைப் பொழிவு உள்ளது. சுவாமிமலை இக்காலத்தில்தான் மிக அழகாக இருக்கும். இக்காலநிலையில் ஈரப்பதம் அதிகமிருந்தாலும், மிக இதமாக இருக்கும். இக்காலநிலையே சுவாமிமலைக்கு சுற்றுலா வர மிகச் சிறந்த காலநிலையாகும். இக்காலத்தில், கோவில்களைத் தரிசிக்க சுற்றுலா வரலாமென சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வெப்பநிலையானது 21°C முதல் 29°C வரை இருக்கும். குளிர்காலம் மிக இதமானதாக உள்ளது. இக்காலத்திலேயே பொங்கல் பண்டிகையும், தைப் பூசத்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்காலத்தில் அவ்வப்பொழுது சிறு சிறு மழைத்தூறல் இருக்கலாம். எனவே இக்காலத்தில் சுற்றுலா வரும் பயணிகள் வெளியில் வரும் பொழுது குடையுடன் வருவது நல்லது.