Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தடியாண்டமோல் » ஈர்க்கும் இடங்கள் » விராஜ்பேட்

விராஜ்பேட், தடியாண்டமோல்

11

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட் நகரம் இங்குள்ள காபி மற்றும் வாசனை பணப்பயிர்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் முக்கியமான சுற்றுலா அம்சமாகவும் விளங்குகிறது.

ஒரு புனிதஸ்தலமாக கருதப்படும் இந்த ஸ்தலத்திற்கு வருடந்தோறும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரளாக வருகின்றனர். மலேதிரிக்கே மலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து கீழே பார்க்கையில் நகரத்தின் மொத்த காட்சியும் அழகாய் கண்முன் விரிகிறது. விராஜ்பேட் நகரத்திற்கு வருகை தரும் பயணிகள் நகரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலுள்ள ககோட்டுபரம்பு எனும் அரை உருளைவடிவில் காட்சியளிக்கும்  மலைக்கும் விஜயம் செய்யலாம்.

மேலும் இங்கு செயிண்ட் ஆன் சர்ச் என்ற பிரசித்தமான ஒரு தேவாலயமும் உள்ளது. இந்த தேவாலயம் ஃபாதர் கல்லிவன் என்பவரால் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய’காதிக்’ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. நகரின் மையத்தின் உள்ள மணிக்கூண்டு வெகுவாக சுற்றுலாப்பயணிகளால் ரசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு கணேசா கோயிலும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.  தடியண்டமோல் மலைஸ்தலத்துக்கு வரும் பயணிகள் இந்த விராஜ்பேட் நகருக்கும் தவறாமல் விஜயம் செய்வது அவசியம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri