`காட்லிங்க்' பனியாறு, பிலங்கானா நதியின் ஆதாரமாக விளங்குகிறது. இந்த பனியாரானது பனி படர்ந்த ஜோகின் குழு, ஸ்ப்ஹெடிக் பிரிஸ்ட்வார், பார்டீ காவ்டெர், கீர்த்தி ஸ்தம்ப் மற்றும் மேரு போன்ற சிகரங்களை உள்ளடக்கியது.
ஒரு இயற்கையான சரளை மண் சுவர் இந்த பனியாறின் இரு பக்கங்களிலும் காணப்படுகிறது. இந்த மண் சுவர் இந்த பனியாற்றினால் உருவான மண் அரிப்பினானால் ஏற்பட்டது.
காட்லிங்க் பனியாற்றுக்கான ட்ரெக்கிங் காட்டுவில் தொடங்குகிறது. காட்டு , டேராடூன், டெஹ்ரி, முசெளரி மற்றும் ரிஷிகேஷ் போன்ற பிற நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 கி.மீ. தூரமுடைய இந்த மலைப் பாதை பல்வேறு கிராமங்கள், ஆழமான கார்ஸவ் காடுகள் மற்றும் பசுமையான தாவரங்கள் நிறைந்த புல்வெளிகள் வழியாக செல்கிறது.
இங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிலங்கானா பள்ளத்தாக்கின் வெவ்வேறு இடங்களில் முகாம் அமைத்து தங்கிக் கொள்ளலாம். முகாமிற்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே ரிஷிகேஷ், டெஹ்ரி மற்றும் டேராடூன் போன்ற இடங்களிலிருந்து ஏற்பாடு செய்துகொள்ள முடியும்.