செம் முக்ஹெம் கோவில் ஒரு மலை உச்சியில் 2903 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது பாம்புகளின் அரசன் நாகராஜாவிற்காக கட்டப்பட்ட கோவிலாகும். இது உள்ளூர் மக்களிடையே மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.
சுற்றுலா பயணிகள் காம்பா காலில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிற்கு ட்ரெக்கிங் செய்து இந்த கோவிலை அடையலாம். காம்பா கால், டெஹ்ரியிலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள் இங்குள்ள முக்ஹெம் கிராம பூசாரிகளால் செய்து தரப்படுகின்றன. முக்ஹெம் கிராமம் காம்பா காலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரம் மலையேறி சென்றால் செம் முக்ஹெம் கோவிலை அடையலாம்.