தேஸு-விற்கு வட-கிழக்காக 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள பரசுராம் குந்த் என்ற புனித தலத்தில் பரசுராமர் வணங்கப்பட்டு வருகிறார். இந்த இடம், சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய முக்கியமான புனிதத் தலமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இங்கு நடத்தப்படும் பரசுராம் மேளா என்ற திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான புனிதப் பயணிகள் வருவது வழக்கம். இந்த பகுதியின் தெய்வீக அழகு, இயற்கையை இரசிப்பவர்களை மெய்மறக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.