Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தஞ்சாவூர் » வானிலை

தஞ்சாவூர் வானிலை

தஞ்சாவூர் நகரத்தை சுற்றிப்பார்த்து ரசிக்க  அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் ஏற்றதாக உள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருப்பினும் ஜுன் மற்றும் செப்டம்பர் மாதங்களில்கூட சுற்றுலாவுக்கேற்ற இதமான சூழல் நிலவுகிறது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் வெயில் பிரச்சினை இல்லாமல் ஊர் சுற்றிப்பார்க்க ஏற்றதாக காணப்படுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை) : தஞ்சாவூர் நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 25°C முதல்  40°C வரை காணப்படும். எனவே இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பகலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வெளிச்சுற்றுலாவில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே கோடைக்காலத்தில் இந்நகருக்கு பயணம் மேற்கொண்டாலும் மெல்லிய சிக்கனமான பருத்தி உடைகளுடன் செல்வது அவசியம்.

மழைக்காலம்

(ஜூன் பாதி  முதல் செப்டம்பர் வரை) :மழைக்காலத்தில் தஞ்சாவூர் நகரம் அவ்வப்போது மழைப்பொழிவை பெறுவதால் அழகுடனேயே காட்சியளிப்பதோடு வெப்பநிலையும் கணிசமாக குறைந்திருக்கக்கூடும். மழைக்காலத்தில் விஜயம் செய்யும் பயணிகள் குடை மற்றும் மழைக்கான முன் தயாரிப்புகளுடன் செல்வது நல்லது. ஏனெனில் கடும் மழைப்பொழிவு திடீரென ஏற்படவும் வாய்ப்புண்டு.

குளிர்காலம்

(நவம்பர் பாதி முதல் பிப்ரவரி பாதி வரை) : குளிர்காலத்தில் தஞ்சாவூர் நகரம் ரசிக்கக்கூடிய இதமான சூழலுடன் காட்சியளிக்கின்றது.   இக்காலத்தில் அதிக குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் 20°C முதல்  30°C வரையான வெப்பநிலையுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது. பொதுவாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திலும் இங்கு மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புண்டு எனும் தகவலையும் பயணிகள் நினைவில் கொள்வது நல்லது.