Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருச்செந்தூர்

திருச்செந்தூர் - செந்தில்நாதன் அரசாங்கம்!

20

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவதால் இந்த ஊர் முருக பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா ஸ்தலங்கள்

திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

திருச்செந்தூர் பற்றி மேலும் சில தகவல்கள்

திருச்செந்தூரை சுற்றி உள்ள வறண்ட நிலக் காடுகளில் பனை, முந்திரி போன்ற வெப்ப மண்டல மரங்கள் நிறந்துள்ளன. கிமு காலத்து சுவடிகளில் திருச்செந்தூர் பற்றிக் குறிப்புகள் உள்ளன.

முருக பெருமான், சூரபத்மன் என்ற அரக்கனை இங்கு வதம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. அதனால் இவ்வூர் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கபாடபுறம் என்றும், பின்னர் திருச்சென்-செந்திலூர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவ்வூருக்கு, பின்னாளில் திருச்செந்தூர் என்ற பெயர் நிலைத்தது.சேரர், பாண்டியர் என பல வம்சங்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர்.

1649ல், போர்துகீஸிடமிருந்து தூத்துகுடியை கைப்பற்ற நினைத்த டச்சு நாட்டினர், இவ்வூர் மீது படை எடுத்தனர். ஆனால், போர்துகீஸியரும் மதுரையை சேர்ந்த நாயக்கர்களும் இணைந்து போராடி டச்சு படையை முறியடித்து விரட்டினர்.

திருச்செந்தூர் வானிலை

வருடம் முழுவதுமே மிதமான பருவநிலை நிலவுவதால் திருச்செந்தூருக்கு நீங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர்  வரையிலான காலம் கோவில்களை காணவும் சில நாள் பயணங்களுக்கும் உகந்தது.

திருச்செந்தூரை அடைவது எப்படி

திருச்செந்தூரை சாலை வழியில் எளிதாக அடையலாம். இதற்கு நெருங்கிய விமான நிலையம் 27 கிமி தொலைவில் தூத்துக்குடியில் உள்ளது. திருநெல்வெலி நிலையித்திலிருந்து இவ்வூருக்கு ரயில் வசதி உள்ளதால்,அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில் மூலமாக எளிதாக அடையலாம்.

நீங்கள் வரலாற்று மற்றும் ஆன்மீக சுற்றுலாவில் விருப்பம் உள்ளவர் எனில், திருச்செந்தூருக்கு கட்டாயமாக வந்து செல்லவும்.

திருச்செந்தூர் சிறப்பு

திருச்செந்தூர் வானிலை

சிறந்த காலநிலை திருச்செந்தூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருச்செந்தூர்

  • சாலை வழியாக
    சென்னை, மதுரை , திருநெல்வெலி, திருவனந்தபுரம்,கன்னியகுமரி போன்ற ஊர்களிலிருந்து திருச்செந்தூருக்கு தமிழக அரசுப் பேருந்துகள் உள்ளன. இவை விலை குறைவாகவும், வசதியாகவும் உள்ளபடியால் திருச்செந்தூரை எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    60கிமி தொலைவில் உள்ள திருநெல்வெலி நிலையத்திலிருந்து இவ்வூருக்கு ரயில் வசதி உள்ளது. சென்னை, திருவனந்தபுரம் , மதுரை போன்ற நகரங்களிலிருந்து திருநெல்வெலி நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல, சென்னை, கோவை, மைசூர் போன்ற நகரங்களிலிருந்து தூத்துக்குடி நிலையத்திற்கு ரயில் வசதி உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருச்செந்தூருக்கு நெருங்கிய விமான நிலையம் 27 கிமி தொலைவில் தூத்துக்குடியில் உள்ளது. மதுரை விமான நிலையித்திலிருந்து கூட எளிதாக அடையலாம். இதற்கு நெருங்கிய சர்வதேச விமான நிலையம் 150 கிமி தொலைவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat