தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது.
இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வன்மிகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர்.
வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.
இக்கோயில், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்களால், பெரும்புகழ் பெற்று விளங்குகிறது. தேர்த்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும் மார்ச் மாதத்தில் இக்கோயிலுக்குச் சென்றால் மிக விசேஷமாக இருக்கும்.