Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவட்டாறு » வானிலை

திருவட்டாறு வானிலை

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை திருவட்டாறு சிறப்பானதாக இருக்கிறது. அதிக குளிர்ச்சியும் இல்லாமல், அதிக உஷ்ணமும் இல்லாமல் இருக்கும்  இந்த காலகட்டமே,  சுற்றுலா செல்வதற்கும் பார்வையிடுவதற்கும் சிறந்த காலம் ஆகும்.  மதிய நேரங்கள் கதகதப்பாக இருக்கின்றது ஆனால் உஷ்ணமாக இருப்பது இல்லை. மாலை நேரங்கள் இனிமையானதாக இருக்கின்றது ஆனால் குளிர்ச்சியாக இருப்பது கிடையாது.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை திருவட்டாறு நகரம் சுட்டெரிக்கும் வெப்பத்தை உணர்கின்றது. தட்பவெப்பம் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லக்கூடும். மதிய நேரங்கள் மிகவும் உஷ்ணமாக இருக்கும். ஈரப்பதமும் எப்போதும் அதிகமாகவே இருக்கின்றது.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை திருவட்டாறில் மிதமானது முதல் கடுமையான மழை பொழிகின்றது. தட்பவெப்பம் 25 டிகிரி செல்சியசுக்கு குறைந்து இனிமையாக இருக்கின்றது. எனினும், பட்டணத்தின் அருகே நீர் நிலையங்கள் இருப்பதால், ஈரப்பதம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

குளிர்காலம்

குளிர்க்காலத்தில் தட்பவெப்பம் 20 டிகிரிக்கு செல்சியசுக்கு குறைவதாலும் 23 டிகிரி செல்சியசுக்கு மேல் எழுவது இல்லை என்பதாலும் , திருவட்டாறில் இந்த காலம் இனிமையானதாக இருக்கின்றது. நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை குளிர்க்காலம் நீடிக்கிறது. மதிய நேரங்கள் கதகதப்பாக இருக்கின்றன, மாலைப்பொழுது அருமையாக இருக்கின்றது.