Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தூத்துக்குடி » வானிலை

தூத்துக்குடி வானிலை

அக்டோபர் மற்றும் மார்ச்சுக்கு இடைப்பட்ட மாதங்கள் தூத்துகுடியை சுற்றி பார்க்க சிறந்த காலங்களாக கருதப்படுகின்றன. இந்தக் காலங்களில் வெப்ப நிலை தணிந்தும், இதமாகவும் காணப்படுவதால் இடங்களை சுற்றிப்பார்ப்பது ரம்மியமான அனுபவத்தை கொடுக்கும்.

கோடைகாலம்

தூத்துக்குடியில் கோடை மிகவும் உஷ்னமாக காணப்படும் மற்றும் கடல் அருகில் இருப்பதன் விளைவாக ஈரப்பதம் இருக்கும். இதை ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் உணரலாம் மற்றும் வெப்ப நிலையானது 30 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தகிக்கிறது. இந்த இதமற்ற கால  நிலையின் காரணமாக இந்த நேரத்தில் இங்கு சுற்றி பார்ப்பது ஏற்றதல்ல.

மழைக்காலம்

தூத்துக்குடி பருவமழை மாதங்களில் அதிக மழை பெறும். பருவமழை ஆகஸ்டில் இருந்து அக்டோபர் வரை இருக்கும். மழை சுற்றுலா நடவடிக்கைகளை இது பாதிக்கும். எனினும் இந்த மாதங்களில் ஒருவர் இங்கு சுற்றுலா செல்ல விரும்பினால் மழை கோட்டுகளை எடுத்து வருவது நல்லது.

குளிர்காலம்

தூத்துக்குடியில் குளிர்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கிறது. பருவமழைக்கு பின் வெப்பம் தணிவதால் குளிர்காலம் சற்று இதமாக இருக்கும். வெப்ப நிலையானது 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது.