Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தௌபல் » வானிலை

தௌபல் வானிலை

தௌபலுக்கு மழைக்காலம் முடிந்த நேரம் செல்வதே சிறந்தது. மழைக்காலம், அனைத்தையும் தூய்மையாக்கி சுற்றுப் புறத்தை பசுமையாக வைத்திருக்கும். தௌபல் மாநகராட்சியில் பல ரோடுகளின் நிலைமை சரியிருக்காது. எனவே மழை முடிந்த நேரம் இங்கு வருவதே சிறப்பானது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் இங்கு வெப்பம் அதிகமாக இருக்காது. அதிகப்பட்சமாக 35-37 டிகிரி செல்சியஸ் வரை தான் இருக்கும். கோடைக்காலம் இங்கு எப்போதும் இனிமையான வெப்பநிலையோடு இருப்பதால், இந்த நகரத்தையும் மாநகராட்சியையும் சுற்றிப் பார்க்க தோதாக இருக்கும். இங்கு கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே வரை நீடிக்கும். சில நேரம் ஜூன் வரை கூட நீடிக்கலாம்.

மழைக்காலம்

இந்த மாநிலத்தின் மற்ற இடங்களை போலவே தௌபலிலும் பருவக்காலம் முக்கியமான ஒன்றாகும். ஆண்டுமுழுவதும் தொடரும் மழை இங்கு நிலவும் பருவக்காலத்தின் சிறப்பு. பருவக்காலம் ஜூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பர் வரை நீடிக்கும். தௌபலுக்கு இந்தக் காலம் செல்வது நல்லதல்ல. பருவக்காலத்திற்குப் பின் இங்கு செல்வதே நல்லது.

குளிர்காலம்

குளிர் காலத்தின் போது இங்கு வெப்பநிலை உறையும் அளவுக்கு செல்லக்கூடும். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர் காலத்தில் குளிர்ந்த வானிலை நிலவும். வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் முதல் 0 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம். பெரும்பாலும் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும். இந்த காலத்தில் இங்கு செல்ல குளிரை தாங்கும் ஆடைகள் கண்டிப்பாக தேவை.