Share This Story
 

பைபிள் டவர், திரிசூர்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

பைபிள் டவர் எனப்படும் இந்த பிரம்மாண்ட கோபுர அமைப்பு ‘அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்’ என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க ‘பஸிலிகா’ சர்ச் (புத்தேன் பள்ளி) வளாகத்திலுள்ள ஒரு முக்கியமான முக்கியமான சிறப்பம்சமாகும்.

திரிசூர் புகைப்படங்கள் - பைபிள் டவர் - இரவுநேரத் தோற்றம் 

இதன் உச்சியில் பெரிய சிவப்பு சிலுவை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த கோபுர கட்டமைப்பு கேரளாவிலேயே உயரமானதாக கருதப்படுகிறது.

கேராளாவின் எல்லா இடத்திலிருந்தும் இந்த சிலுவைக்கோபுரத்தை பார்க்கலாம் என்பதாக நம்பப்படுகிறது. இங்கு மரச்செதுக்கு வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு செய்யப்பட்ட கண்ணாடி அலங்காரங்கள், பித்தளை வடிவமைப்புகள் போன்றவற்றில் ஏசு கிறிஸ்து மற்றும் செயிண்ட் தாமஸ் போன்ற அபோஸ்தலர்களின் வாழ்க்கை வரலாற்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

பஸிலிகா தேவாலயத்தின் பலவருட பாரம்பரியம் மற்றும் கிறிஸ்துவ மதகுருமார்களின் ஒருங்கிணைந்த உழைப்பு போன்றவற்றை இக்கோபுரத்தின் பிரம்மாண்டம் பிரதிபலிக்கிறது.

Click here to type in tamil
பைபிள் டவர் புகைப்படங்கள்