Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திரிசூர் » வானிலை

திரிசூர் வானிலை

அதிக உஷ்ணத்துடன் காணப்படும் கோடைக்காலம், இடைவிடாத மழைப்பொழிவைக்கொண்ட மழைக்காலம் ஆகியவற்றை தவிர்த்த அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான பருவமே திரிசூர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. கேரளாவின் ‘பாரம்பரிய தலைநகரமான திரிசூரில் கவலையில்லாமல் ஊர் சுற்றிப்பார்த்து ரசிக்கவோ அல்லது கால்நடைப்பயணம் மேற்கொள்ளவோ இப்பருவம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): திரிசூர் பிரதேசம் வறட்சியான மற்றும் புழுக்கமான கோடைக்காலத்தைப் பெற்றுள்ளது. சராசரியாக கோடைக்காலத்தில் வெப்பநிலை 30° C முதல் அதிகபட்சமாக 35° C வரை காணப்படுகிறது. கோடைக்காலம் அசௌகரியமாக இருக்குமென்பதால் பயணிகள் இக்காலத்தில் திரிசூர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): திரிசூர் பிரதேசத்தில் மே மாத இறுதியிலிருந்து தென்மேற்கு பருவ மழைக்காலம் துவங்குகிறது .ஜூலை மாத பாதி வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவு இப்பகுதியில் காணப்படுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): சராசரியாக 30° C வெப்பநிலை காணப்படுவதால் திரிசூர் பிரதேசம் குளிர்காலத்தில் குளுமையாகவும் இனிமையான சூழலுடனும் காட்சியளிக்கிறது.