டோங்க் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள நெவாய் எனும் இடத்தில் உள்ள பகத் சிங் காலனியில் இந்த சிவாஜி கார்டன் அமைந்துள்ளது. முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிற இது மைசூர் கார்டன்ஸ் மற்றும் ஹிரண் மகாரி பார்க் போன்றவற்றை ஒத்துள்ளது.
5 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் ஒரு நீச்சல் குளம் மற்றும் இசை நீரூற்றுகள் போன்றவை அமைந்துள்ளன. ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த தோட்டம் உள்ளது.