உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

இந்த மாநிலங்களை எளிமையா கடக்க இந்த வழிகள்ல போங்க!

Written by: Vinubala Jagasirpiyan
Updated: Thursday, March 2, 2017, 16:15 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

சாலை பயணம் எப்பொழுதுமே, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவர்க்கும் ஓர் சுவாரசத்தையும், சாகச உணர்வை தரக் கூடியது.

நாம் எதிர்நோக்கும் ஒரு செயலாகவே சாலை பயணம் இருக்கிறது. நம் கஷ்டங்களுக்கும், கவலைகளுக்கும் மருந்தாக இருக்கும் சாலை பயணத்தை மேற்கொள்ளும்பொழுது தான் அதில் உள்ள சுகம் புரியும்.
இந்தியாவில் உள்ள சில சாலைகள் மற்றும் இடங்கள் உலகிலையே மிகவும் அழகானவை. பல கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் கண்கவர் இடங்கள் இங்கே உள்ளன. 

இலக்கு எங்கே என்று முடிவு செய்யாமலே ஒரு சாலை பயணத்தை எதிர்கொள்ள விரும்புவாரா நீங்கள்? இதோ உங்களுக்காக இந்தியாவின் முக்கிய 10 மாநிலங்களை உள்ளடக்கக் கூடிய சிறந்த சாலை வழி பயணம்.

சோனாமார்க் - சோஜிலா பாஸ் - ட்ரஸ் - புலி காடு - கார்கில்.


இந்த குறிப்பிட்ட சாலை அனைவருக்குமே கோடைகாலத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. சோஜிலா பாஸ் சாலையில் உள்ள வளைவுகளில் சென்றால் தங்களுக்கு புரியும், கண்டிப்பாக இதில் எளிதில் பயப்படுபவர்கள் பயணிக்க முடியாது என்று. நீங்கள் ஓர் சாகச விரும்பியில்லை என்றால் இந்த பயணம் உங்கள் மனதை மாற்ற வாய்ப்புகள் உள்ளது.
ட்ரஸ் உலகிலையே மிக குளிரான இடங்களில் ஒன்று. இந்த கடும் குளிரிலும் அப்பகுதியில் உள்ள காவல்துறையினர் தனது கடமைகளை தவறாமல் செய்துகொண்டு வருகின்றனர். இச்செயலை காணும்பொழுது அவர்களுக்கு தலைவணங்க தோணுகிறது.


PC":Anwaraj

 

 

சென்னை - கல்பாக்கம் - சிதம்பரம் - ராமநாதபுரம் - தூத்துக்குடி (690 கிமி).


வங்காள விரிகுடாவின் ஓரமாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலை மிகவும் பிரபலமான சாலை என்றே கூறலாம். இ.சி.ஆர் எனவும் அழைக்கப்படும் இச்சாலை, இந்தியாவின் இயற்கை அழகுமிக்க காட்சிகள் கொண்ட சாலைகளில் ஒன்றாகும். சென்னையிலிருந்து தூத்துக்குடி சுமார் 690 கிமி, இருசக்கர வாகன பயணிகளுக்கு இப்பாதை ஓர் வரப்பிரசாதம்.
இந்த அற்புத சாலை கடலோர அழகை தொகுத்து வழங்குகிறது, முகத்தில் பாயும் அந்த கடலோர காற்று இருசக்கர பயணிகளுக்கு ஒரு வித சிலிர்ப்பை தருகிறது. இந்த சாலையின் பயணம் ஓவ்வோறு கட்டத்திலும் மேம்பட்டுக்கொண்டே போகும் என்று உறுதி அளிக்கலாம்.

PC: Ryan

 

மணாலி - கசா - ரெக்கோங் - சிட்குள் - சிம்லா.


ஹிமாலயன் சாலை பயணத்தை மேற்கொள்ள ஆசை படுபவரா நீங்கள்? மணலியில் இருந்து ஷிம்லாவுக்கு செல்லும் வழியில் கொட்டிகிடக்கும் இயர்க்கையின் அழகை ரசிக்க இரு விழிகள் போதாது, பயணத்தின் இறுதி வரை இயற்கை அன்னையின் மாயன்களை கண்டு ரசித்து கொண்டே இருக்கலாம்.
இந்த பயணம் மணலியிலிருந்து ஆரம்பித்து சன்றதால், கேய், கிபர், தங்கர், ரெக்கோங் பெ ஊர்கள் வழியாக செல்கிறது.
சற்று வழிமாறி சிட்குள் என்ற இடத்திற்கு செலவும், இது தான் இந்தோ திபெத்திய எல்லையின் கடைசி கிராமம் என கூறப்படுகிறது, இந்த தொலை தூர பயணம் கண்டிப்பாக உங்கள் சாகச தாகத்தை தணிக்கும்.

PC: Malvikaparu

 

கொல்கத்தா - டார்ஜிலிங் - கேங்டாக் - ஸுலூக் - அழிபுர்த்வார் - தவாங்.


இந்த சுவாரசிய பயணத்தை, கொல்கத்தாவில் இருந்து ஆரம்பிக்கும் நீங்கள் இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் இடங்களை ஆராய உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். இந்தியாவின் வட கிழக்கு நுழைவாயிலான டார்ஜிலிங் வாயிலாக செல்கிறது இந்த பயணம்.
இந்த சவாரியின் பொழுது ஸுலுகில் வரும் சூழல்களையும் மற்றும் தவாங்கில் பசுமை தன்மைவாய்ந்த தேயிலை தோட்டங்களையும் காணும் பொழுது உங்களுக்கு அவ்விடம் ஒரு ஆராய படாத சொரக்கம் இது என்ற உணர்வை தரும்.

PC: Aranya449

 

டெல்லி - அஜ்மர் - புஷ்கர் - ஜெய்ப்பூர்.


இப்பயணத்தில் ஓர் முக்கிய அங்கம், செல்லும் சாலை வழி தான். அதை மூன்று பிரிவாக பிரித்து கொள்ளலாம் டெல்லியில் இருந்து பெரோர், பெராரில் இருந்து ஜெய்ப்பூர் பைபாஸ், ஜெய்ப்பூர் பைபாஸ்ஸில் இருந்து புஷ்கர். உலகிலேயே மிக இயற்கை அழகு கொஞ்சும் வழிகளில் ஒன்றானது ஜி.கே.வி. அதிவேக சாலை. இந்த சாலையில் பயணிக்கவே இங்கே சுற்றுலா பயணிகள் குவிக்கின்றனர் என கூறப்படுகின்றது.

PC: singh92karan

 

பெங்களூரு - மைசூர்- அல்லெப்பி - முன்னார் - தேக்கடி.


பசுமைக்கு பேர்போன பெங்களுருவில் இருந்து கடவுளின் நாடக அழைக்க படும் கேரளாவிற்கு ஓர் சாலை பயணம். பெங்களுருவில் இருந்து மைசூர், குருவாயூர் மற்றும் அல்லேப்பி வழியாக தேக்கடி செல்லும் இந்த சாலை பயணம் கண்டிப்பாக உங்களை தன் வசப்படுத்தும்.
முதலில் குருவாயூரை அடைவீர், அங்கே இருக்கும் கிருஷ்ணன் கோவிலை தரிசனம் செய்த பின் அடுத்த நிறுத்தம் அல்லெப்பி அல்லது ஆலப்புழா, இயற்கை அழகு எழில் கொஞ்சும் இந்த நகரத்தில் தெளிவான உப்பங்கழி மற்றும் அழகிய சிறு குக்கிராமங்களை கண்டு ரசிக்கலாம்.
இறுதியில் தேக்கடியில் உள்ள பெரியார் தேசிய பூங்காவை பார்த்துவிட்டு பயணத்தை நிறைவு செய்யலாம்.

PC: Jim Ankan Deka

 

குவாஹாத்தி - நம்மீறி - சிரோ - மஜூலி - சிவாசாகர் - கஜிரங்கா - ஷில்லாங் - சிறப்புஞ்சீ.


வடகிழக்கில் உள்ள இயற்கையின் மிக சிறந்த படைப்பான நிலத்தை ஆராய விரும்புவார்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. இனிமையான வடகிழக்கு மக்களின் இசையோடு மென்மையான சூரிய ஒளியோடு சிரோவின் பச்சை புல் வெளிகளோடும் இந்த பயணம் இனிமையானதாக இருக்கும்.
மஜூலியில் இருக்கும் மிதக்கும் தீவை கண்டு மெய் சிலிர்த்து போகாதவர் இல்லை என்று தான் கூறமுடியும். இது இயற்கையின் ஓர் அதிசயமே.

PC: Debasisbora

 

மணாலி- ரோடங் பாஸ் - பாராளச்சா லா - தங்லங் லா - கர்த்துங் லா - நுப்ரா பள்ளத்தாக்கு - சங் லா - பாங்கொங் ட்ஸோ.


இந்த பாதை இரு சக்கர பயணிகளால் புனித இடம் என்று அழைக்கப்படுகிறது. ஹிமாலையாவின் மிக அழகிய பகுதியான இது சமீபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை பயண விரும்பிகளுக்கும் ஓர் விருப்பமான இடமாக மாறி வருகிறது. கிழக்கு பகுதியில் இருக்கும் லெஹ், இப்பொழுது அதன் இயற்கை வசிகரத்தால் பயணிகளிடம் பிரபலம் ஆகி கொண்டு வருகிறது.
இருசக்கர வாகன பயணிகளுக்கு மிக பிடித்தமான பாதையாகவே இது மாறிவிட்டது என்பதை கண் கூடாக காணலாம்.


PC: Anthony Maw

 

மும்பை - பரோடா - தியு - சோம்நாத் - கிர் - றான் ஆப் கட்ச்.


இந்தியாவின் மேற்கத்திய பகுதியான குஜராத்தை ஆராய இதுவே மிக சரியான பாதை. வரலாற்று கதைகள் மிகுந்து உள்ள குஜராத் சுற்றுலா பயணிகளுக்கு பவித்ரமான உணர்வை தருகிறது. மும்பையில் இருந்து தொடங்கும் இப்பயணம் பரோடாவில் இருந்து றான் ஆப் கட்ச் வாயிலாக அழகிய நகரமான கிர்ரை சென்று அடைகிறது. பின் மனதை மயக்கும் பாலைவனம் உங்கள் கண்களுக்கு விருந்தாகும். இந்த பயணம் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத ஒன்றாக இருக்கும்!

PC: Mohnish1208

 

அவுரங்காபாத் - இண்டோர் - போபால் - சாகர் - காஜுராஹோ.


டிராபிக் ஆப் கேன்சருக்கு குறுக்கே செல்லும் இந்த பாதை வாயிலாக இந்தியாவின் இதைய பகுதியில் பயணம் மேற்கொள்ள ஒரு வாய்ப்பு இதோ. மைய பகுதியான மத்திய பிரதேஷ், இந்தியாவிலையே இரண்டாம் பெரிய மாநிலம். இங்கு இருக்கும் கலாச்சார ரகசியங்கள் உங்களை கண்டிப்பாக கவரும். போபால், சாகர் வாயிலாக காஜுராஹோ சாலை அடையும் முன் அவுரங்காபாத் தான் நீங்கள் கடந்த செல்ல கூடிய கடைசி மராத்திய நகரமாக இருக்கும்.
ஓர் பயணியின் கனவு இடமாக காஜுராஹோ இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

PC: PriteshS21

 

Read more about: travel, பயணம்
English summary

10 Best Roadtrips You Could Take Across India Covering Almost Every State

10 Best Roadtrips You Could Take Across India Covering Almost Every State
Please Wait while comments are loading...