Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் சிறந்த 10 வனவிலங்கு தேசிய பூங்காக்கள்

இந்தியாவின் சிறந்த 10 வனவிலங்கு தேசிய பூங்காக்கள்

இந்தியாவில் ஏறத்தாழ 200க்கும் மேற்ப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிகமானவை தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டு அரசால் சுற்றுலா ஊக்குவிக்கப்படும் இடங்களாக உள்ளன. பல்வேறு பட்ட புவியியல் அமைப்புகள், மாறுபட்ட சீதோஷன நிலைகள், கணக்கிட முடியாத வகைகளில் விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என ஒவ்வொரு தேசியப்பூங்காவும் அதிசயங்களை அள்ளித்தந்தாலும் அதில் சில வேறெங்கும் நமக்கு கிடைக்காத காட்சிகளையும், அனுபவங்களையும் தர வல்லன. வாருங்கள் இந்தியாவின் 10 சிறந்த வனவிலங்கு தேசிய பூங்காக்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

இந்தியாவின் மிகப்பழமையான தேசியப்பூங்காவன இது உத்தராஞ்சல் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. அடர்த்தியான வனத்தினுள்ளே அமைந்திருக்கும் இப்பூங்காவில் ஏராளமான வனவிலங்குகளை நாம் கண்டுரசிக்க முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான வங்கப்புலியை காணலாம். யானை மீது அமர்ந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசியுங்கள்.

Photo:Arindam Bhattacharya

காசிரங்கா தேசிய பூங்கா:

காசிரங்கா தேசிய பூங்கா:

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா தேசிய பூங்காவில் இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒற்றைகொம்பு காண்டாமிருகங்கள் வாழ்கின்றன. உலகத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கே வாழ்கின்றனவாம். அது தவிர நீர் யானைகள், இந்திய காட்டு யானைகள் மற்றும் வங்கப்புலிகள் இங்கே வாழ்கின்றன. வனவிலங்கு புகைப்படத்துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தால் காசிரங்கா தேசிய பூங்கா உங்கள் சொர்க்கம்.

photo: Arindam Bhattacharya

சுந்தர்பன் தேசிய பூங்கா:

சுந்தர்பன் தேசிய பூங்கா:

மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்காவில் தான் அதிக அளவில் புலிகள் வாழ்கின்றனவாம். மிகவும் பாதுகாக்கப்பட்ட இப்பூங்காவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சுட்ட்ருலாப்பயனிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிக விஷமுள்ள பாம்புகள் மற்றும் பூச்சிகள் இப்பூங்காவில் வாழ்கின்றன.

Photo: arnabg

கன்ஹா தேசிய பூங்கா:

கன்ஹா தேசிய பூங்கா:

மத்தியப்பிரதேச மாநிலம் மன்ட்லாவில் அமைந்திருக்கிறது கன்ஹா தேசிய பூங்கா. இந்தியாவில் வனவிலங்கு ஆர்வலர்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக இப்பூங்கா இருக்கின்றது. வங்கப்புலிகள், சிறுத்தைகள், இந்திய காட்டு நாய்கள் மற்றும் நரிகள் இப்பூங்காவில் இருக்கும் முயக்கியமான விலங்குகள் ஆகும்.

Photo: Shaunak Modi

கிர் வனவிலங்கு சரணாலயம்:

கிர் வனவிலங்கு சரணாலயம்:

இந்திய சிங்கங்களின் ஒரே வசிப்பிடமான கிர் வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. அழிவின் விழும்பில் இருந்த இந்திய சிங்கங்கள் இப்பூங்கா அமைக்கப்பட்டதன் காரணமாக தற்போது எண்ணிக்கையில் பெருகி இருக்கின்றன. இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுள் முக்கியமானதான இதனுள் சிங்கங்கள் தவிர மான்கள், காட்டுபூனைகள், சில வகை கழுதைப்புலிகள் வாழ்கின்றன. மிருகங்களை நேசிப்பவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது அவசியம் வரவேண்டிய இடம் இந்தப்பூங்கா.

Photo: Shaunak Modi

பெரியார் தேசிய பூங்கா:

பெரியார் தேசிய பூங்கா:

கேரளாவில் சுற்றிலும் மலைகள் சூழ அமைந்திருக்கிறது பெரியார் தேசிய பூங்கா. கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இப்பூங்காவில் மிகபயங்கரமான பாம்புகளான ராஜ நாகங்கள் அதிகமாக வாழ்கின்றன. மழைக்காடுகள் அதிகம் உள்ளபகுதி என்பதால் எப்போதும் பசுமையுடன் காட்சி தருகின்றன. இந்திய யானைகள் மற்றும் புலிகளையும் இப்பூங்காவில் நாம் காண முடியும்.

Photo: Monika & Tim

பந்தவார்க் தேசிய பூங்கா:

பந்தவார்க் தேசிய பூங்கா:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உம்ரியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த பந்தவார்க் தேசிய பூங்கா. உலகிலேயே வங்கப்புலிகள் இப்பூங்காவில் தான் அதிகமாக வசிக்கின்றன. இங்கு வாழும் சீதா என்ற பெண் புலியை பற்றி டிஸ்கவரி சேனல் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. மேலும் இந்த சீதா தான் உலகிலேயே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட புலி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் லங்கூர் குரங்குகள், சாம்பார் மான்கள், சிறுத்தைகள் இங்கு பெரும் அளவில் வாழ்கின்றன.

Photo: Koshy Koshy

ரத்ம்போர் தேசிய பூங்கா:

ரத்ம்போர் தேசிய பூங்கா:

புலிகளை காண இந்தியாவின் சிறந்த இடம் என இப்பூங்கா வர்ணிக்கப்படுகிறது. ஜீப்பில் வன உலா சென்றபடி இப்பூங்காவில் புலிகளை வெகு அருகில் காணலாம். இந்த தேசிய பூங்காவினுள் ரத்ம்போர் கோட்டை அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. காட்டுப்பன்றிகள், சாபார் மான்கள் போன்ற விலங்குளையும் நாம் இங்கே காண முடியும்.

Photo: Andrew Miller

ஹெமிஸ் தேசிய பூங்கா:

ஹெமிஸ் தேசிய பூங்கா:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக்கில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பரப்பளவு விகிதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசியபூங்கா என அழைக்கப்படும் இதனுள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள பனிச்சிறுத்தைகள் அதிகமாக வாழ்கின்றன. மொத்தம் 200 பனிச்சிறுத்தைகள் இதனுள் இருக்கின்றன. திபெத்திய நரி, யுரேசியா மான், செந்நரி போன்ற வேறெங்கும் காண முடியாத விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன. தங்க கழுகுகள் மற்றும் பிணந்தின்னி கழுகுகள் இந்தன் சிறப்புகள் ஆகும்.

Photo: Enric Güell

சரிஸ்கா புலிகள் சரணாலயம்:

சரிஸ்கா புலிகள் சரணாலயம்:

இந்தியாவின் மிக அதிகமாக சுற்றுலாப்பயணிகள் வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த சரிஸ்கா புலிகள் சரணாலயம். காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், ராட்சத பல்லிகள், ஆமைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் வரும் பறவைகள் சரணாலயமும் இங்கு இருக்கின்றன. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இப்பூங்கா கொண்டுவரப்பட்டாலும் தற்போது அதிக அளவில் இங்கு புலிகள் வசிப்பதில்லை.

Photo: Mirza Asad Baig

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X