Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் புகழ்பெற்ற 10 தேவாலயங்கள்!!!

சென்னையின் புகழ்பெற்ற 10 தேவாலயங்கள்!!!

By

சாந்தோம் தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் போன்றவை இன்று சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

இன்று சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் பெரும்பாலானவை பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டவையாகும்.

இவை சென்னையின் கட்டிடக்கலை வரலாற்றில் பெரும் பங்காற்றுகின்றன. இப்படியாக சென்னையின் புகழ்பெற்ற தேவாலயங்கலாக கருதப்படும் 10 தேவாலயங்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஆர்மேனியன் தேவாலயம்

ஆர்மேனியன் தேவாலயம்

1712-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்மேனியன் தேவாலயம் இந்திய துணைக்கண்டத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 1772-ஆம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டப்பட்ட இந்த தேவாலயம் கன்னி மேரியின் ஆர்மேனியன் தேவாலயம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது சென்னை பாரி முனையின் ஆர்மேனியன் வீதியில் அமைந்துள்ளது.

படம் : Svs99n

செயின்ட் தெரஸா சர்ச்

செயின்ட் தெரஸா சர்ச்

செயின்ட் தெரஸா சர்ச் சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் 1970-ல் கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறில் செயின்ட் தெரஸா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

படம் : Agneljose

சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் தேவாலயம்

16-ஆம் நூற்றாண்டில் சென்னைக் கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசியர்களால் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கத்தீட்ரல் அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்

செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்

சென்னை கிண்டி அருகேயுள்ள பரங்கிமலை எனும் சிறு குன்றின் மீது இந்த புனித தோமையார் தேவாலயம் அமைந்துள்ளது. ஏசு கிறித்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் கி.பி 52ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திறங்கி பின் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு மரித்ததாக நம்பப்படுகிறது. இது பற்றிய குறிப்புகளை பரங்கி மலை தேவாலய வளாகத்தில் காணலாம்.

மேலும் தகவலுக்கு

செயின்ட் பாட்ரிக்ஸ் கத்தீட்ரல்

செயின்ட் பாட்ரிக்ஸ் கத்தீட்ரல்

பரங்கிமலைக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள செயின்ட் பாட்ரிக்ஸ் கத்தீட்ரல் தேவாலயமும் சென்னையின் பிரபலமான தேவாலயங்களில் ஒன்று.

படம் : PlaneMad

பிரகாச மாதா தேவாலயம்

பிரகாச மாதா தேவாலயம்

1516-ஆம் ஆண்டு போர்த்துக்கீசர்களால் கட்டப்பட்ட பிரகாச மாதா தேவாலயம் சென்னையின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இது போர்த்துக்கீசிய பெயரான 'நோசா சென்ஹோரா டா லஸ்' (Nossa Senhora da Luz) என்று அலுவல் ரீதியாக அறியப்பட்டாலும், 'லஸ் சர்ச்' என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள இந்த தேவாலயம் சாந்தோம் தேவாலயத்துக்கு அருகிலேயே அமையப்பெற்றிருக்கிறது.

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

ஆங்கிலிக்கன் சபை, மெதடிஸ்டு சபை, பிரெஸ்பிட்டேரியன் சபை மற்றும் கான்ங்ரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபையை இந்த தேவாலயத்தில்தான் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயம் 1815ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச்

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச்

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின்னால் அமைந்துள்ளது. ஸ்காட்லாந்து பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த தேவாலயம் 1821-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் மேரிஸ் தேவாலயம்

செயின்ட் மேரிஸ் தேவாலயம்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம், 1680-ல் கிழக்கிந்திய கம்பெனியாரால் கட்டப்பட்டதாகும். இவ்வாலயத்தில்தான் புகழ்பெற்ற ஆங்கிலேய மேஜர் ஜெனரல் இராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி சர்ச்

வேளாங்கண்ணி சர்ச்

அவர் லேடி ஆஃப் ஹெல்த் வேளாங்கண்ணி தேவாலயம் சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தின் சிறிய வடிவத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

Read more about: சென்னை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X