Search
  • Follow NativePlanet
Share
» »உங்க ஃப்ரண்ட்ஸோட பாக்க வேண்டிய 10 இடங்கள் இந்தியால என்னென்ன எல்லாம் இருக்கு?

உங்க ஃப்ரண்ட்ஸோட பாக்க வேண்டிய 10 இடங்கள் இந்தியால என்னென்ன எல்லாம் இருக்கு?

உங்க ஃப்ரண்ட்ஸோட பாக்க வேண்டிய 10 இடங்கள் இந்தியால என்னென்ன எல்லாம் இருக்கு?

By Balakarthik Balasubramanian

தேவையான நேரத்தில் உதவும் நண்பனே உற்ற நண்பனாவான். எப்படி இத்தகைய கருத்தானது உரைக்கப்படுகிறது? இந்த கேள்விக்கான பதில் நீண்டு செல்வதோடு, அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ் நிலையையும் சார்ந்தும் இருக்கிறது. நீங்கள் உங்கள் தோழர்களுடன் இருக்கும்போது...அதுவும் குறிப்பாக சிறந்த ஒரு நண்பனோடு இருக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையானது உற்சாகத்துடனும், துடிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறது.

உங்களுடைய உற்ற நண்பனுடன் எங்காவது வெளியில் செல்வீர்களென்றால், அது எத்தகைய காலமாக இருந்தாலும் சரி! எத்தகைய இடமாக இருந்தாலும் சரி...கண்டிப்பாக அந்த இடத்தில் உங்களுக்கு எண்ணற்ற சிறப்பம்சங்களும், ஆச்சரியங்களும் நிறைந்து உங்கள் மனதினை இதமாக்கும் என்பதே உண்மை. வாழ்க்கை என்பது ரிமோட்டை போல சிறியதாக இருந்தாலும்.

அதனை சரியாக நேர்த்தியாக நாம் இயக்கி மனதை இன்பத்தால் நிரப்பி, வானுயர பறந்து பலவற்றை தெரிந்துக்கொள்ளலாம். அவற்றுள் ஒருவித இன்ப உணர்வு என்பது, உங்கள் தோழனுடன் விதவிதமான இடத்திற்கு செல்வதென்பது உங்களுக்கு தெரியுமா?

உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை, சங்கடம் மறந்து தர துடிக்கும் நட்பு வட்டாரத்துடன் நாம் இத்தகைய இடங்களை சென்று பார்ப்போமெனில் அது உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிமையான பயணமாக அமைவது உறுதி. உங்களை நேசிக்கும் ஒருவரே ஒவ்வொரு நொடியும் நகைச்சுவை உணர்வோடு பாசம் என்னும் மாயவலையில் பிண்ணி அன்பின் ஆழத்தை புரியவைப்பர். அவர்களோடு நீங்கள் செல்லும் பயணமானது ஒரு புதுவித அனுபவத்தையும் உங்களுக்கு தரக்கூடும்.
அதனால், அப்பேற்ப்பட்ட ஒரு பயண திட்டத்தை தீட்டி நண்பர்களுடன் விடுமுறையை மிளிர செய்யும் இடப்பட்டியல் ஒன்றை தயார் செய்து இதோ உங்களுக்காக சமர்ப்பிக்கிறோம். பாருங்களேன்...

மணலி:

மணலி:

நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியதொரு இடமாக இவ்விடமிருக்க, இங்கே பனி மூடிய மலைகளும், நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் அழகும், அமைதியான பள்ளத்தாக்குமென அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய ஒரு இடமாக இந்த மணலி இருக்கிறது. நீங்கள்,பிடித்த ஒரு நபருடனோ அல்லது தனியாக பயணம் செய்தாலோ, இங்கே அடிவாரத்தில் கூடாரம் அமைத்து, மலை ஏறும் ஆர்வலர்களோடு சேர்ந்து தங்களுடைய பயணத்தில் இனிமையானதோர் உணர்வினை பெறலாம்.
இந்த ஏற்ற பயணம் மலைகள், நகரங்கள், என பலவழிகளின் வழியாக செல்ல, நேரத்தை அயர்ந்து அசதியால் செலவிடாமல் தொடர்ந்து நம்மை பயணிக்க வைக்க கூடிய இயற்கை அழகு நிறைந்த ஆர்வமிக்க ஒரு இடமும் கூட இது என்பது நமக்கு தெரியவும் வருகிறது.

_paVan_

மேகாலயா:

மேகாலயா:

மதிமயக்கும் அழகிய இடமான மேகாலயா, உயர்ந்த மலைகளையும், முடிவற்ற நீரோடைகளையும், நீர்வீழ்ச்சிகளையும் கொண்டிருக்கிறது. ‘மேகங்களின் உறைவிடம்' என அழைக்கப்படும் மேகாலயாவை பார்க்கும் நம் மனம், இவ்வளவு நாட்கள் எப்படி இப்பேற்ப்பட்ட சொர்க்க பூமியை காணாமல் இருந்தோம் என்றதொரு உணர்வினை நம் மனதில் தருகிறது.

உங்களை கடந்து செல்லும் மேகத்தின் அழகினை பார்த்து பரவசமடைய, இரகசிய குகைளில் காணும் பாறைகளின் இடுக்கில் பல்வேறு மர்ம முடிச்சுகளை கொண்டு அழகிய காட்சியை மட்டும் நம் கண்களுக்கு தந்து மனதில் கேள்விக்கணையை தொடுக்கிறது.

Ashwin Kumar

லடாக்:

லடாக்:

உயர்ந்த வழி நிலங்களை கொண்ட லடாக் பகுதி மலட்டு நிலங்களை கொண்டு, பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் அழகிய காட்சிகளால் மனதினை கவர்கிறது. வடக்கு திசையில் ஜம்மு & காஷ்மீர் காணப்பட, கிழக்கில் திபெத்தும், மேற்கில் அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கும், தெற்குதிசையில் லாஹௌல் மற்றும் ஸ்பித்தி பள்ளத்தாக்குகளும் காணப்படுகிறது.

இயற்கையை மார்பில் புதைத்து மனதினை வருடும் அழகிய இடங்கள் இந்த லடாக்கில் காணப்பட, இங்கே காணப்படும் நிலங்கள் நெஞ்சினை நெருடுகிறது. இத்தகைய ஈர்க்கப்படும் இடங்களால் உங்கள் மனது ஈர்க்கப் படுமெனில், மதிமயக்கும் இந்த இடத்தை நம் உற்றவர்களுடன் சென்று உறவின் பிணைப்பை வலுப்படுத்தி மனமகிழலாமே.

Alosh Bennett

புஷ்கர்:

புஷ்கர்:


நாட்டில் இருக்கும் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றான இவ்விடம், இடிபாடுகள் கொண்ட பல சுவாரஸ்யமான இடங்களை கொண்டிருக்கிறது. மறக்கப்பட்ட நினைவுகளை சுமந்த இந்த இடம், இன்று பலரும் வந்து பார்த்து செல்லும் இடங்களின் பட்டியலில் இடம்பெற்று மனதை இதமாக்குகிறது.

ஷெர்லாக் ஹோல்மஸ் துப்பறியும் சுவாரசியங்களுக்கு ஏற்ற அழகிய இடமான இந்த இடம், விடுமுறையின் போது வரும் உங்கள் மனதில் சுவாரஸ்யத்தை கூட்டி அதன் அடுத்த பாகத்தை எடுக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நானூறு சரணாலயங்களுக்கு மேல் கொண்டிருக்கும் இந்த சிறிய குக்கிராமம், பிரம்ம கோவிலின் வீடாக விளங்குகிறது. இந்த ஆலயமானது, தனக்கெனதோர் தனி தன்மை இடம் பிடித்து உலகத்திலே மிகவும் பிரசித்திபெற்று விளங்குவதாகவும் தெரிய வருகிறது.

இந்த இடத்திற்கு வருவதன்மூலமாக வரலாற்று கலாச்சாரத்தின் பின்னணியை நாம் தெரிந்துகொண்டாலும் சரி...இல்லை என்றால் ஓய்வு எடுத்து அமைதிக்கொண்டாலும் சரி...இந்த இடம் உங்கள் மனதில் உற்சாகத்தை தந்து உச்சி மறந்து குதிக்க வைக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.

Jason Rufus

தர்மசாலா:

தர்மசாலா:

கங்க்ரா பள்ளத்தாக்கின் மேலே காணப்படும் இந்த இடம், மிகவும் பிரசித்திபெற்று விளங்கும் அனைவரது விருப்ப இடமாகும். இந்த நகரத்தின் தடித்த தேவதாரு மரங்களையும், கேதுரு மரங்களையும் கொண்டிருக்க, திபெத்திய அகதிகளின் ஆதரவு இடமாக இது அதிகம் காணப்படுகிறது. புனித இடங்களுள் முக்கிய பங்கினை வகிக்கும் இவ்விடம், புத்தமதத்தின் திபெத்திய மதகுருவான தலை லாமாவின் இடம் என்னும் சிறப்புடனும் விளங்குகிறது.

குறைபாடற்ற அழகிய இடமான இந்த தர்மசாலா...அள்ளிதரும் இயற்கை அழகால் நம் மனதை ஆர்ப்பரிக்க செய்கிறது. இந்த அழகிய அமைதி நிறைந்த இடமானது, உங்களுக்கும் உங்கள் உற்ற தோழர்களுக்கும் சிறந்த இடமாக அமைய, மனமின்றி திளைத்து தான் நிற்கிறது நம் மனம்.

Kiran Jonnalagadda

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் காணப்படும் மனம் மயக்கும் மலர்கள்:

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் காணப்படும் மனம் மயக்கும் மலர்கள்:

1931ஆம் ஆண்டு, ப்ராங்க் ஸ்மித் என்ற ஆங்கிலேய பயணியால் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்...பூமியில் காணும் சொர்க்கம் இந்த அழகிய மலர் நிறைந்த இடமெனவும் நமக்கு தெரியும்பொழுது மனம் செல்லத்தான் திண்டாடி தவிக்கிறது. இந்த அழகிய பள்ளத்தாக்கிற்கு பயணம் வரும் ஆர்வலர்கள் பல இடங்களை ஆராய்ந்து தங்கள் இன்பத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.

எண்ணற்ற மலர்களுக்கு உறைவிடமாக இந்த இடமிருக்க, இங்கே காணும் வண்ணத்து பூச்சிகளும், மலர்களில் மொய்க்கும் வண்டுகளும் அதற்கு மேலும் அழகு சேர்த்து நம் மனதை தூக்கி கொண்டு தூர செல்கிறது.

இந்த பள்ளத்தாக்கானது இமயமலையின் மத்தியில் 3858 மீட்டர் உயரத்தில் காணப்படுவதோடு...விடுமுறைக்கு, நம் மனம் விரும்பிய ஒரு நபருடன் வருவதற்கு ஏற்ற சிறந்த இடமாகவும் விளங்குகிறது.

__sandip__

கோவா:

கோவா:


கடற்கரையின் செந்நிற அழகு நம்மை சாய்க்க, இரவு கூத்து அரங்கேற்றம், வெப்பமண்டல அதிர்வுகள் என நம்மை இந்த இடம் சிலிர்க்க வைக்கிறது. இதன் வெளிப்புறத் தோற்ற அழகு நம்மை கோவாவை நோக்கி பயணிக்க வைத்து பரவசத்தில் தள்ளுமென்பதில் எத்தகைய சந்தேகமும் நமக்கு வேண்டாம்.

சுவாரஸ்யமான ஹாலிவுட் த்ரில்லர் காட்சிகளை போன்றும், மனம் கவர்ந்த ஒருவரின் கண்களை பார்த்து காதல் காட்சிகளுக்கு ஏற்ற இடமாகவும் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வேதனையை மறக்க செய்கிறது கோவா. உங்கள் விடுமுறைக்கான விருப்பப் பட்டியலில் கோவாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி உற்சாகமான இடத்தை தருவீர்கள் என்பதே நிசப்தம்.

காலனித்துவ கட்டிடக்கலையின் அழகானது நம்மை ஆச்சரியத்தில் திளைக்கவைத்து, மனதினை கட்டிபோட்டு காணல் நீராய் மாற்றுகிறது. சுவையூட்டும் உணவுகளும், யோகா, சூரியனை வெட்கப்பட வைக்கும் சூரிய குளியல் என நம் மனதை சுண்டி இழுக்கும் இந்த கோவாவை நம் மனம் கவர்ந்த நபருடன் வந்து பார்த்து செல்ல வேண்டியது மிகவும் இன்பத்தை தரும்.

Alexander Annenkov

பஞ்ச்கானி:

பஞ்ச்கானி:

மஹாபலேஸ்வரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஓர் அழகிய இடம் தான் இந்த பஞ்ச்கானி. இதற்கு இத்தகைய பெயர் வர காரணமாக, இங்கே சூழ்ந்துள்ள ஐந்து மலைகளானது காணப்படுகிறது.

சாகச மூட்டும் ஒரு உணர்வினை தரும் இந்த இடம் அனைத்து விடுமுறை விரும்பிகளுக்கும் சிறந்த இடமாகவும் அமைகிறது. 4000 அடி உயரத்தில் காணப்படும் இந்த இடமானது, பழமையான பார்ஸி வீடுகளையும், ஸ்ட்ராபெர்ரி பண்ணைகளையும் கொண்டிருக்கிறது.

BentheCM

இலட்சத்தீவுகள்:

இலட்சத்தீவுகள்:

நீல நிற நீர், வெள்ளை நிற கடற் மணல்கள், சரம் சரமாய் பனை மரங்கள் என இந்த இலட்சத்தீவை காணும் கண்கள் வார்த்தையற்று இதழுக்கு ஓய்வுத்தர, மிதக்கும் படிக நீரின் அழகை பதிவுசெய்து, துள்ளி அந்த நீரில் குதித்து அழகிய பவள பாறைகளையும் ஆழத்தில் சென்று பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த இடமானது, நம் மனம் விரும்பியுடன் வரவேண்டிய ஒரு இடமாக நமக்கு அமைய, இங்கே வசிக்கும் மீனவர்களை நம்மால் அதிகம் பார்க்க முடிகிறது. இந்த குழுவாக அமைந்திருக்கும் தீவிற்கு உலகம் முழுவதுமிருந்து பலரும் வந்து செல்ல, அவர்கள் உள்ளூர் மீன் பிடி முறையையும், அவர்கள் அன்றாட வாழ்க்கை பற்றியும் தெரிந்துகொண்டு திரும்பவும் முடிகிறது.

Stefan Krasowski

அவுலி:

அவுலி:

மதிமயக்கும் அழகிய அனுபவத்தை தரும் கர்வால் தொடர்ச்சியின் அவுலிக்கு 3.5 கிலோமீட்டர்கள் நாம் நீண்ட பயணமாக கேபிள் காரில் செல்ல, ஜோஹிமத்தை அடைகிறோம். இங்கிருந்து நாம் பார்க்க, நந்தா தேவி, காமெட், ட்ரோனகிரியின் அழகின் ஈர்ப்பில் இனியதோர் உணர்வினை கொள்கிறோம்.
பனி சறுக்கு, நதியில் படகு பயணம், மலை ஏறுதல் பயணமென செல்லும் இடமெல்லாம் சாகசத்தின் உச்சியில் நம்மை திளைக்க செய்து இதமானதோர் உணர்வினை மனதில் விளையாட்டு தனமாய் கொள்ள செய்கிறது.

Joginder Pathak

Read more about: travel trip
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X