உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா பற்றி மோசமாக நினைக்கும் 15 விஷயங்கள்!

Written by: Udhaya
Updated: Thursday, June 15, 2017, 9:59 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இந்தியா ஒரு நாடு என்றால் அது பொய்யாகத்தான் இருக்கவேண்டும். அது பல நாடுகளின் கூட்டமைப்பு. ஆம் அப்படித்தான் கருதியாகவேண்டும். பல்வேறு இனங்கள், பல மொழிகள், பல பழக்கவழக்கங்கள் என எவ்வளவு வேற்றுமை இருந்தாலும், ஒற்றுமையாக ஒரே நாடாக இருக்கிறது இந்தியா.

ஆன்மீகம் தொடர்பான பல்வேறு சுற்றுலாக்கள் சிறப்பாக இருந்தாலும், இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் சிலவற்றை ஆச்சர்யமாக பார்க்கின்றனர். அதாவது அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன், இந்தியாவைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருந்தார்களோ அதுவெல்லாம் பொய்யாக கண்முன்னே காண்கின்றனர்.

ஆம் அப்படி இந்தியா மீது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்ன அவிப்பிராயம் கொண்டிருந்தனர் தெரியுமா?

அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே....

ஸ்லம்டாக் மில்லியனர்

 

ஆஸ்கார் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் இந்தியா பெரும்பாலும் ஸ்லம் எனப்படும் சேரி பகுதி நிறைந்த இடமாகும் என்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கணிப்பு.

 

ஆனால் இந்தியா

 

இந்தியா முழுவதும் அதிகமாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்கின்றனர் என்று நினைத்திருந்தவர்கள், இந்தியா வந்து பார்க்கும்போது அது உண்மையல்ல என்பதை புரிந்து கொண்டனர். உண்மையில் இந்தியா வளமான நாடு என்பது அவர்களுக்கு தெரிகிறது.

 

பாம்பாட்டிகளின் தேசம்

 

இந்தியா பாம்புகள் நிறைந்த பகுதி. அங்கு வாழ்பவர்கள் பாம்புகளைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் என்று பல சுற்றுலாப் பயணிகள் கருதியுள்ளனர். அவர்கள் இந்தியா வருவதற்கு பயந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

 

உண்மை தெரியுமா

 

இந்தியா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நினைத்ததுபோல் இல்லை என்றாலும் சராசரி அளவு பாம்பு இனங்கள் வாழும் பல்லுயிர் காடுகள், அடர்ந்த வனப்பரப்புகள் கொண்ட செழிக்கும் நாடு.

சமீபகாலங்களில் மழை குறைவு, காடுகள் அழிப்பு நிறைய நடக்கிறது. இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்கவேண்டும். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

மேலும் தெரிந்து கொள்ள சொடுக்கவும் 

மாய உலகம்


இந்தியா ஒரு மாய உலகம். இங்கு மந்திரங்கள் ஓதி தங்களை மறையச் செய்துவிடுவார்கள் என்றும் பலர் நினைக்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதையே ஆபத்தாக உணர்கிறார்களாம்.

 

மாய உலகம்

 

அன்பின் மாய உலகம்


இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள மக்களின் அன்பைப் பெற்று, இங்கிருந்து அவர்களை பிரிந்து செல்ல மனமில்லாமல் விசா பெற்று மீண்டும் மீண்டும் சுற்றுலா வருவதையும் வாடிக்கையாக்கியுள்ளனர் சிலர். அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான் . இந்திய மக்களின் அன்பிற்கு ஈடு இணையில்லை.

திருமணச் சிறை

 

இங்கு வாழும் மக்கள் அனைவரும் அவரவர்க்கு பிடித்தமாதிரி திருமணம் செய்வதில்லை என அவர்கள் நினைக்கின்றனர். இந்திய திருமணங்கள் ஒரு டார்ச்சர் என்றும் கட்டாயப் படுத்தி நடத்திவைக்கப்படும் என்றும் அவர்கள் நினைத்திருக்கின்றனர்.

 

இந்திய முறையில் திருமணம் செய்யும் வெளிநாட்டவர்கள்

 

இந்தியாவில் வரன் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் அதிகம்தான் . இருந்தாலும் மனதுக்கு பிடிக்காதவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதெல்லாம் அதிகம் குறைந்துவிட்டது. வெளிநாட்டவர்களே இந்தியர்களைப் போல் திருமணம் செய்கின்றனர்.

 

எல்லா உணவுகளும் சூடானவை

 

இந்தியாவின் அனைத்து உணவுப் பொருட்களும் சூடானதாக இருக்கும் என்று பல சுற்றுலாப் பயணிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

 

கலக் கலக் கலக் கலக்....

 

உண்மைதான் .. எங்கள் பாரம்பரிய சுவை உணவுகள் ஹாட் ஆனவை. அதற்காக எங்களிடம் குளிர்ச்சியான உணவு இல்லாமல் இல்லை. வகை வகையான குளிர்ந்த உணவுகள்,.உங்களை சில்லென்று பறக்கவைக்கும் உணவுகளும் உள்ளன தெரியுமா?

 

இங்க இங்கிலீஷ் ரெம்ப கேவலமா இருக்கும்


இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு மிகவும் கேலியானதாக இருக்கும் என்பது வெளிநாட்டில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணம். ஆனால்.....

இந்த வீடியோ வ பாருங்க

இங்கிலிஷ் பேசினாலும் தமிழன்டா

 

தமிழர்கள் மட்டுமில்லாமல் இந்தியர்கள் யாராயினும் அவர்களின் ஆங்கில உச்சரிப்பு மிகவும் வேகம் குறைந்ததாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது எல்லாருக்கும் புரியும்படியாக இருக்கும்.

 

பழமையான கட்டிடங்கள்

 

இந்தியா பழங்கால கட்டிடங்கள் பாழடைந்த இடங்களைக் கொண்டதாக இருக்கும் என்பது அவர்கள் எண்ணம்.

 

கட்டடக்கலை

 

இந்தியா கட்டடக் கலையில் உலகுக்கு முன்மாதிரியானது. அதற்காக இந்தியாவில் பழமையான கட்டிடங்கள் மட்டுமே இல்லை. உலகின் அதிநவீன கட்டிடங்களுக்கு இணையாக பல கட்டமைப்புகள் இந்தியாவிலும் உள்ளன.

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையம், உலகின் மிக பெரிய கிளவர் இலை பாலம், உலகின் மிகப்பெரிய கான்கிரீட் அணை என பல கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன.

 

எல்லா இந்திய உணவுகளும் குழம்பு காரமல்ல


இந்தியாவைப் பற்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நினைப்பதில் ஒன்றுதான் இது. இங்கு எல்லாமே கறி வகைதான் என தவறாக நினைக்கிறார்கள்.

இங்கு கறி இல்லாமலும் உண்டுப்பா

 

கருப்பட்டி இட்லி, பனியாரம், கொளுக்கட்டை, நெய் அப்பம், முறுக்கு, அவியல், தோசை என பலவகையான உணவுகள் உண்டு. என்பது அவர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர்தான் தெரிந்துகொள்கின்றனர்.

 

நீங்க இந்தியன் பேசுவீங்களா?

 

அட தண்ட கருமாந்திரம். என்ன கேள்வி கேக்குறான் பாருய்யா என்று திட்ட ஆரம்பித்திருப்பீர்களே.. ஆனால் வெளிநாட்டவர் பலர் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியர்களின் மொழி இந்தியன் என்று..

டேய்..டேய்,.. டேய் இது ரத்த பூமி...

 

வட போச்சே

 

இந்தியர்களின் மொழி இந்தியன் என்று நினைப்பவர்களுக்கு இங்கு வந்த பிறகுதான் அப்படி ஒரு மொழி இல்லை என்றே தெரிகிறது.

 

மண்டய மண்டய ஆட்டிக்கிட்டு

 

இந்தியர்கள் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருப்பார்கள் என்று பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நினைக்கின்றனர்.

 

அதுலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும்தான்டி மாப்ளே...


ஏதோ ஒரு இந்தி படத்த சப் டைட்டில்ல பாத்துட்டு அப்படியே இந்தியர்கள் நாடி புடிச்சி பாத்தமாதிரி பேசுற ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இப்படித்தான்.. கண்டுக்காதீங்க..

நாங்க சிங்கம் மாதிரி .. கெத்தா... கிராண்ட்டா....

 

இந்தி தேசிய மொழியாமாம்

 

வெளிநாட்டவர்களை விடுங்கள்.. அட இந்த நார்த் இன்டியா பக்கிங்க பல பேரு அப்படித்தான் சொல்லிட்டு திரியுறானுங்க ஊருக்குள்ள..

 

இல்லை இல்லை இல்லை.. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் கோப்பால்

 

இந்தியாவிலேயே அதிகம் பேசப்படுற மொழி இந்திதான்.. ஓகே.. ஆனா அது தேசிய மொழி அல்ல.... இந்தியாவுக்கு தேசிய மொழினு ஒன்னு இல்ல.. இங்க இருபத்தி மூன்று மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழியா இருக்கு.. இந்தி ஒரு வார்த்தை கூட தெரியாத ஆளுங்கலாம் இங்க இருக்கோம்பா...

ஆமால வா மச்சி... ஹைஃபை,...

 

இந்தியர்கள் ஏழைகள்

 

ஆமா.. இந்தியர்களில் பெரும்பாலும் ஏழைகள் தான்.. அவங்க ரொம்ப கடினப்பட்டுதான் வாழ்க்கைய ஓட்டுறாங்க..

 

அப்போ அனில் அம்பானி, அதானிலாம்


இந்தியர்களில் நிறைய நடுத்தரவர்க்கத்தினர். ஏழைகளும் இருக்கிறார்கள். ஆனால் இங்கு பணக்காரர்களும்சொல்லும் அளவுக்கு இருக்கின்றனரே

படிப்பறிவில்லாதவர்கள் இந்தியர்கள்


பொதுவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் அனைவரும் படிப்பறிவில்லாதவர்கள் என்று நினைப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கல்வியறிவு விகிதம் தெரியுமாமா?

 

இந்தியா நாளுக்கு நாள் கல்வியறிவில் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் கல்வியறிவு சராசரி 2011ம் ஆண்டில் 74.04 சதவிகிதம். இப்போது கிட்டத்தட்ட 78 சதவிகிதமாகிவிட்டது.

 

எங்கே பாத்தாலும் குப்பை...

 

இந்தியா ஒரு குப்பை நாடு என்கின்றனர் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

 

இல்லை .. ஆமா... ஆமாஇல்லை...

 

யார்யா சொன்னா இந்தியா குப்பை நாடுனு.. ஆமா.. குப்பைகள் குவிந்து கிடக்குது.. என்ன பண்ண... இருந்தாலும்.. எல்லா இடமும் அப்படி இல்லிங்களே... சுத்தமான இடங்களும் இருக்கு பாருங்க..

குப்பைகளை குப்பைத் தொட்டியில் இடுவோம்.. சுகாதாரம் பேணுவோம்

இந்தியா ரொம்ப சூடு...


இந்தியா வருவதற்கு அச்சப்படும் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சொல்வது இந்தியா ஒரு வெப்பமயமான நாடு...

இந்தியா சூடு தான்..... ஜில்லும் இருக்கே

 

இந்தியா நீங்கள் நினைப்பதுபோல அப்படியே சூடான நாடு இல்லை. இங்கு மிகவும் சூடான இடங்களும், குளிர்ந்த இடங்களும் இருக்கு பாஸ்...

 

Read more about: travel, foreign
English summary

15 Things Foreign tourists Don’t Believe Till They Come To India

15 Things Foreign tourists Don’t Believe Till They Come To India
Please Wait while comments are loading...