Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 17 உலகத்தரமான விமான நிலையங்கள்!!!

இந்தியாவின் 17 உலகத்தரமான விமான நிலையங்கள்!!!

By Staff

உலக அளவில் 9-வது மிகப்பெரிய விமான போக்குவரத்து துறையாக இந்தியா திகழ்கிறது. அதோடு இந்தியாவின் ஒரு சில விமான நிலையங்கள் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் தரம் மற்றும் அளவைப் பொறுத்து நாட்டின் தரமிக்க விமான நிலையங்களாக 17 விமான நிலையங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த 17 விமான நிலையங்கள் என்னென்ன, அவை எங்கு அமைந்துள்ளன என்று பார்ப்போம் வாருங்கள்!

விமான டிக்கட் முன்பதிவு

சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்

சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்

மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முன்பு சாகர் விமான நிலையம் என்ற பெயரில் அறியப்பட்டது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் 2-வது போக்குவரத்து மிக்க விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

புது டெல்லியின் மையப் பகுதியிலிருந்து 16 கி.மீ தொலைவில் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவின் மையப்பகுதியிலிருந்து 17 கி.மீ தொலைவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. இது சுபாஷ் சந்திரபோஸின் நினைவாகப் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பு டம் டம் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த விமான நிலையம் இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து மிகுந்தவற்றில் 5-தாக உள்ளது.

அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்

அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்

சென்னையின் நகரப் பகுதியிலிருந்து சற்று விலகி 7 கி.மீ தொலைவில் மீனம்பாக்கத்தில் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை மற்றும் டெல்லிக்கு பிறகு முக்கியமான விமான நிலையமாகவும், மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு விமான நிலையமாகவும் திகழ்ந்து வருகிறது.

கொச்சி சர்வதேச விமான நிலையம்

கொச்சி சர்வதேச விமான நிலையம்

கொச்சி நகருக்கு தென்கிழக்காக 30 கி.மீ தொலைவில் நெடும்பாச்சேரி என்ற பகுதியில் கொச்சி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் விமான நிலையம் இருந்தாலும் கொச்சி சர்வதேச விமான நிலையமே கேரளாவின் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாகவும், நாட்டின் 4-வது பரபரப்பான விமான நிலையமாகவும் அறியப்படுகிறது.

பெங்களூர் சர்வதேச விமான நிலையம்

பெங்களூர் சர்வதேச விமான நிலையம்

பெங்களூர் நகர மையத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் சர்வதேச விமான நிலையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கெம்பேகவுடா விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 10 உள்நாட்டு சேவைகளையும் 21 வெளிநாட்டு சேவைகளையும் இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ஹைதராபாத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் ஷம்ஷாபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. பேகம்பேட் பகுதியில் இயங்கி வந்த விமான நிலையத்துக்கு மாற்றாக கட்டப்பட்ட ராஜீவ் காந்தி விமான நிலையம் 2008-ஆம் ஆண்டிலிருந்து விமான போக்குவரத்து சேவையை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 30 கி.மீ தொலைவில் தாபோலிம் எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் கோவா சர்வதேச விமான நிலையம் அந்த கிராமத்தின் பெயராலேயே தாபோலிம் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

வீர் சாவர்கர் பன்னாட்டு விமான நிலையம்

வீர் சாவர்கர் பன்னாட்டு விமான நிலையம்

அந்தமான் நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து 2 கி.மீ தொலைவில் வீர் சாவர்கர் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமானம் 10,794 அடி நீளம் கொண்ட ஓடுதளத்தை உடையது.

படம் : Charles Haynes

லோக்பிரிய கோபிநாத் போர்தோலோய் பன்னாட்டு விமான நிலையம்

லோக்பிரிய கோபிநாத் போர்தோலோய் பன்னாட்டு விமான நிலையம்

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியிலுள்ள போர்ஜ்ஹார் பகுதியில் லோக்பிரிய கோபிநாத் போர்தோலோய் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் அஸ்ஸாம் முதல்வர் கோபிநாத் போர்தோலோயின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

படம் : abymac

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையம்

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையம்

குஜராத்தின் அகமதாபாத் நகரிலிருந்து 9 கி.மீ தொலைவில் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் இந்தியாவின் 8-வது மிகவும் பரபரப்பான விமான நிலையமாக அறியப்படுகிறது.

படம் : Nisarg Vyas

மங்களூர் விமான நிலையம்

மங்களூர் விமான நிலையம்

மங்களூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பஜ்பே நகரில் அமைந்திருப்பதால் முன்னர் இது பஜ்பே விமான நிலையம் என்றே அழைக்கப்பட்டது. 1951-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விமான நிலையமே கர்நாடகாவின் பழமையான விமான நிலையமாக அறியப்படுகிறது.

படம் : Premkudva

கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம்

கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம்

மலப்புறம் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், கோழிக்கோடு நகரிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ள கரிப்பூர் எனும் சிறிய நகரில் கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. கரிப்பூர் விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் 13-வது மிகவும் பரபரப்பான விமான நிலையமாக அறியப்படுகிறது.

படம் : Barimds

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம்தான் கேரளாவின் முதல் விமான நிலையம் ஆகும். அதோடு மெட்ரோ அல்லாத இந்திய நகரமொன்றில் அமைக்கப்பட்ட முதல் பன்னாட்டு விமான நிலையமாகவும் இந்த விமான நிலையம் அறியப்படுகிறது.

படம் : Kurush Pawar

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்

கோயம்புத்தூரின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் 18-வது மிகப்பெரிய விமான நிலையமாகும்.

படம் : PP Yoonus

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு பிறகு தமிழகத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது.

படம் : Tiruchian

விசாகப்பட்டணம் சர்வதேச விமான நிலையம்

விசாகப்பட்டணம் சர்வதேச விமான நிலையம்

புதிய ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக விசாகப்பட்டணம் சர்வதேச விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையம் விசாகப்பட்டணம் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Julian Lim

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X