Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகாவின் 25 தவிர்க்கமுடியாத சுற்றுலாத் தலங்கள்!!!

கர்நாடகாவின் 25 தவிர்க்கமுடியாத சுற்றுலாத் தலங்கள்!!!

By

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன.

அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன.

அவ்வாறாக அமையப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் தவிர்க்கமுடியாத 25 சுற்றுலாத் தலங்களை இங்கே காண்போம்!

சக்லேஷ்பூர்

சக்லேஷ்பூர்

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள சக்லேஷ்பூர் நகரம், உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும், மலையேற்ற வசதிகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

சக்லேஷ்பூர் ஹோட்டல்கள்

படம் : snapper san

ஹம்பி

ஹம்பி

விஜயநகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதைச் சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களுக்காகவும் உலக அளவில் ஹம்பி நகரம் புகழுடன் அறியப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ஹம்பி ஹோட்டல்கள்

படம் : Apadegal

பெங்களூர்

பெங்களூர்

இந்தியாவின் புதிய முகங்களில் ஒன்றாக வேறுபட்ட கலாச்சாரங்களுடனும், எண்ணற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுடனும், எக்கச்சக்கமான அடுக்குமாடி கட்டிடங்களுடனும் பெங்களூர் மாநகரம் நவீனத்தின் சின்னமாகத்தான் அனைவராலும் அறியப்படுகிறது. அதே நேரத்தில் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களுடன் உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெங்களூர் மாநகருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன.

பெங்களூர் ஹோட்டல்கள்

படம்

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.

ஜோக் நீர்வீழ்ச்சி ஹோட்டல்கள்

படம் : Sarvagnya

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

நாகர்ஹொளே தேசியப் பூங்கா

கர்நாடகாவின் நாகர்ஹொளே பகுதியில் உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் தேனுண்ணுங் கரடி, கருஞ்சிறுத்தை, நான்கு கொம்புகள் உடைய இரலை மான்கள், காட்டுப் பன்றி, எறும்புத்திண்ணி, காட்டெருமை, புலிகள் உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு மலைப்பாம்பு, முதலை, விரியன் பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளும் வசித்து வருகின்றன. இவைத்தவிர எண்ணற்ற பறவை இனங்களும் இங்கே காணப்படுகின்றன. மேலும் கர்நாடகாவின் மற்றொரு புகழ்பெற்ற தேசியப் பூங்காவான பந்திப்பூர் தேசியப் பூங்காவையும், நாகர்ஹொளே தேசியப் பூங்காவையும் பிரிக்கும் கபினி ஆறும் இந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாகும்.

நாகர்ஹொளே ரிசார்ட்டுகள்

படம் : Dhruvaraj S

மங்களூர்

மங்களூர்

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.

மங்களூர் ஹோட்டல்கள்

பீஜாப்பூர்

பீஜாப்பூர்

பெங்களூர் நகரத்திலிருந்து 521 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பீஜாப்பூர் நகரில் காணப்படும் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் அதன் மேன்மையான பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும் பறைசாற்றும் சாட்சிகளாகும்.

பீஜாப்பூர் ஹோட்டல்கள்

படம் : Sanyam Bahga

சிக்மகளூர்

சிக்மகளூர்

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய தோற்றங்களுக்கு சொந்தமான மலேநாடு பகுதியில் அமைந்துள்ள சிக்மகளூர் நகரம், இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிய அட்டகாசமான சுற்றுலாத் தலமாகும்.

சிக்மகளூர் ஹோட்டல்கள்

படம் : Riju K

மைசூர்

மைசூர்

கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

மைசூர் ஹோட்டல்கள்

கூர்க்

கூர்க்

இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது.

கூர்க் ஹோட்டல்கள்

படம் : Lingeswaran Marimuthukum

ஹாசன்

ஹாசன்

ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் ஹாசன் நகரம் முழுக்க கண்டு ரசிக்கலாம். இந்த நகரம் கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 184 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஹாசன் நகரை எப்படி அடைவது?

பந்திபூர்

பந்திபூர்

பந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 900 ச.கி.மீ பரப்பளவுக்கு பரவி காணப்படும் இந்த ‘புலிகள் பாதுகாப்புத்திட்ட வனப்பகுதி', மைசூரிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 220 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பந்திபூர் ஹோட்டல்கள்

படம் : Yathin S Krishnappa

குதுரேமுக்

குதுரேமுக்

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குதுரேமுக் மலைவாசஸ்தலம், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.

குதுரேமுக் ஹோட்டல்கள்

படம் : Karunakar Rayker

சிரவணபெலகொலா

சிரவணபெலகொலா

சிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது ஒரு காலத்தில் சிரவணபெலகொலா நகரம் பிரசித்தமான ஜைன திருத்தலமாக விளங்கியிருப்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது. இந்த நகரம் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிரவணபெலகொலா நகரை எப்படி அடைவது?

கோகர்ணா

கோகர்ணா

கார்வார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோகர்ணா நகரம், ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

கோகர்ணா ஹோட்டல்கள்

கொல்லூர்

கொல்லூர்

கர்நாடக மாநிலத்தின் குந்தாப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள சிறிய நகரமான கொல்லூர், தேவி மூகாம்பிகையின் கோயில் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

கொல்லூரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Premkudva

கெம்மனகுண்டி

கெம்மனகுண்டி

சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.

கெம்மனகுண்டியை எப்படி அடைவது?

படம் : Vijay Sawant

ஹுப்ளி

ஹுப்ளி

வட கர்நாடகாவின் வணிக மையமாக விளங்கும் ஹுப்ளி தொழிற்துறை, வாகன உற்பத்தி மற்றும் கல்வித்துறை போன்ற துறைகளில் பெங்களூருக்கு அடுத்தபடியான ஒரு கேந்திரமாக கர்நாடகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஹுப்ளி ஹோட்டல்கள்

படம் : Syed Zohaibullah

கார்வார்

கார்வார்

கார்வார் நகரம் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கோவாவிலிருந்து 87 கி.மீ தூரத்திலும், பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

கார்வார் ஹோட்டல்கள்

படம் : Noronha3

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

தாண்டேலி வனவிலங்கு சரணாலயம்

கர்நாடகாவின் 2-வது மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாக அறியப்படும் தாண்டேலி வனவிலங்கு சரணாலயம், தலைநகர் பெங்களூரிலிருந்து 462 கி.மீ தொலைவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் கருஞ்சிறுத்தை போன்ற சில அரிய வகை விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியாக திகழ்கிறது. அதோடு குரைக்கும் மான், சாம்பார் மான், புள்ளி மான் போன்ற விலங்கினங்களும், 200 வகையான பறவை இனங்களும் இங்கு வசிக்கின்றன.

படம் : Cburnett

தர்மஸ்தாலா

தர்மஸ்தாலா

வரலாற்று சிறப்பு வாய்ந்த தர்மஸ்தாலா கிராமம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே நேத்ராவதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும். இங்குள்ள மஞ்சுனாதேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் தங்க லிங்கத்தை தரிசிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மக்கள் தர்மஸ்தாலாவிற்கு வருகின்றனர். அதோடு ரத்னகிரி குன்றின் உச்சியில் 39 அடி உயரமும், 175 டன் எடையுடனும் அமைந்திருக்கும் பாஹுபலி சிலையும் தர்மஸ்தாலாவின் முக்கிய ஈர்ப்பாகும்.

தர்மஸ்தாலா எப்படி அடைவது?

ஸ்ரீரங்கப்பட்டணா

ஸ்ரீரங்கப்பட்டணா

காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம், ஸ்ரீரங்கப்பட்டண சங்கமம் அல்லது முக்கூடல் என்று அழைக்கப்படும் காவேரி - கபினி - ஹேமாவதி ஆறுகள் கூடும் ஸ்தலமாக திகழ்கிறது. இந்நகரில் உள்ள 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.

சிருங்கேரி

சிருங்கேரி

துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான சிருங்கேரி நகரில்தான் ஹிந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த சிருங்கேரி நகரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் விஜயம் செய்யும் ஒரு புனிதத்தலமாகவும் இருந்து வருகிறது. இது பெங்களூரிலிருந்து 330 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிருங்கேரியை எப்படி அடைவது?

படம்

பாதாமி

பாதாமி

கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6-ஆம் நூற்றாண்டிலிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரை சாளுக்கிய வம்சத்தின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது.

பாதாமியை எப்படி அடைவது?

படம் : Sankara Subramanian

பனவாசி

பனவாசி

சரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும்.

பனவாசியை எப்படி அடைவது?

படம்

Read more about: கர்நாடகா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X