Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 5 பெரிய ஷாப்பிங் மால்கள்!

இந்தியாவின் 5 பெரிய ஷாப்பிங் மால்கள்!

By

ஷாப்பிங் மால்கள் அல்லது அடுக்குமாடி வணிக வளாகங்கள் என்று அறியப்படும் கட்டிடங்கள் தற்போது இந்தியாவின் எல்லா பெரிய நகரங்களிலும் முளைக்க தொடங்கியுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் ஷாப்பிங் மால்கள் இல்லாத நகரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே ஒன்றிரண்டு ஷாப்பிங் மால்களை பார்க்க முடிந்தது. இப்போது அனைத்து நகரங்களிலும் ஷாப்பிங் மால்களை காண முடிவதுடன் பெருநகரங்களில் பத்து, இருபது என்ற எண்ணிக்கையில் ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் இந்தியப் பெருநகரங்களான மும்பை, பெங்களூர், டெல்லி, சென்னை போன்றவற்றில் கட்டப்படிருக்கின்றன.

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, குர்லா

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, குர்லா

மும்பையின் துணை நகரமாக அறியப்படும் குர்லா நகரில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிதான் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக கருதப்படுகிறது. இது 4,050,000 சதுர அடியில் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங்க மால்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

லூலூ கொச்சின் மால், கொச்சி

லூலூ கொச்சின் மால், கொச்சி

கேரள மாநிலம் கொச்சி நகரில் லூலூ கொச்சின் மால் அமைந்துள்ளது. இது 3,900,000 சதுர அடியில் கேரளாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாகவும், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த மால் வளாகத்திலேயே JW மாரியாட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் அமைந்துள்ளது.

ஹை ஸ்ட்ரீட் ஃபீனிக்ஸ் லோவர் பரேல்

ஹை ஸ்ட்ரீட் ஃபீனிக்ஸ் லோவர் பரேல்

மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றாக அறியப்பட்ட பரேல் நகரில் ஹை ஸ்ட்ரீட் ஃபீனிக்ஸ் லோவர் பரேல் அமைந்துள்ளது. இந்த மால் வளாகத்தினுள் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றும் அமைந்துள்ளன. இது மொத்தம் 3,300,000 சதுர அடியில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

ஆர்ச்சிட் ஓசோன் மால், வாஷி

ஆர்ச்சிட் ஓசோன் மால், வாஷி

நவி மும்பையின் வாஷி பகுதியில் அமைந்திருக்கும் ஆர்ச்சிட் ஓசோன் மால் மும்பை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்திருக்கும் மால்களில் மிகச் சிறந்த மால்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு எல்லா பிராண்டுகளும் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் ஜேஜேவென்றுதான் இருக்கும். இது 2,500,000 சதுர அடியில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, புனே

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, புனே

புனே நகரில் அமைந்திருக்கும் ஷாப்பிங் மால்களிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி கருதப்படுகிறது. இது 3,400,000 சதுர அடியில் பரந்து விரிந்து காணப்படுவதுடன் ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X