Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிகப்பழமையான 5 நகரங்கள்!

இந்தியாவின் மிகப்பழமையான 5 நகரங்கள்!

இந்தியாவின் மிகப்பழமையான 5 நகரங்கள்!

By

உலகின் தொன்மையான நாகரிகமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய வரலாற்று சிறப்பு வாய்ந்த நாடு இந்தியா.

அப்படிப்பட்ட இந்தியாவில் அமைந்திருக்கும் பல நகரங்கள் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

ஆனால் கடல் கொண்டு போன நம் தமிழ்நாட்டின் பூம்புகார் நகரம் போல எத்தனையோ நகரங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

எனினும் நம்மிடையே மிஞ்சியிருக்கும் பழமையான நகரங்களில் இன்றும் கூட ஏராளமான மக்கள் பாரம்பரிய பெருமைகளை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

வாரணாசி

வாரணாசி

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நகரின் தனிச்சிறப்பாக கங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் படித்துறைகளை சொல்லலாம். இவற்றில் தசாஸ்வமேத் படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் தர்பங்கா படித்துறை, ஹனுமான் படித்துறை மற்றும் மன்மந்திர் படித்துறை ஆகியன இங்குள்ள மற்ற சில படித்துறைகளாகும்.

படம் : Jeeheon Cho

மதுரை

மதுரை

மதுரை மாநகரம் தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமாகவும், இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மீனாட்சியம்மன் கோயில் போன்ற புகழ்பெற்ற கோயிலகள் ஏராளம் உள்ளத்தால் 'கோயில் நகரம்' என்றும், எந்நேரமும் அதாவது 24 மணி நேரமும் சந்தடி நிறந்த நகரம் என்பதால் தூங்கா நகரம் என்றும் பல்வேறு சிறப்பு பெயர்களில் மதுரை அழைக்கப்படுகிறது.

படம் : Surajram

உஜ்ஜைன்

உஜ்ஜைன்

மத்தியப்பிரதேசத்தின் மிகப்பழமை வாய்ந்த நகரமான உஜ்ஜைன், உஜ்ஜயினி என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அசோகர் மற்றும் விக்ரமாதித்யா போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடம் இது. மகாபாரதத்தில் உஜ்ஜைன் நகரம் அவந்தி பேரரசின் தலைநகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கவி காளிதாசரும் தன் பாடல்கள் மற்றும் கவிதைகளை இங்கு இயற்றியுள்ளார்.

படம் : shubham

பாட்னா

பாட்னா

நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் தலைநகரமாகத் திகழ்கிறது. புனிதமான கங்கா நதியின் தெற்குக்கரையைச் சுற்றி செழிப்புடன் பாட்னா நகரம் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பாட்னாவின் சுற்றுலா, புத்தமத ஸ்தலங்களான ராஜ்கீர், வைஷாலி மற்றும் கேஸரியா, போதி மரம், காந்தி சேது, கோல்கார் மற்றும் தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப் போன்ற ஆவலைத் தூண்டும் பல்வேறு சுற்றுலா ஈர்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.

படம் : Maverick.Mohit

புஷ்கர்

புஷ்கர்

புஷ்கர் என்ற சிறு நகரம் 400 கோயில்களையும், 52 மலைத்தொடர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் உலகிலேயே பிரம்மாவுக்காக கட்டப்பட்டுள்ள இரண்டு கோயில்களில் ஒன்று புஷ்கரில் உள்ளது. மற்றொரு பிரம்மா கோயில் கும்பகோணத்தில் அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்க்கும் புஷ்கர் நகரம் பற்றிய குறிப்புகள் ஃபா-ஹீன் எனும் 4-ஆம் நூற்றாண்டு சீன தேசத்து பயணியின் பயண நூல்களில் ஏராளம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மகாகவி காளிதாசர் தன்னுடைய அபிக்யான் சாகுந்தலம் என்னும் நாடகத்தில் புஷ்கர் நகரம் குறித்து புகழ் பாடியிருக்கிறார்.

படம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X