உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

Updated: Monday, June 26, 2017, 9:33 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இங்கே மாட்டுக் கறிக்கு தடை.... காசியில் என்ன நடக்கிறது தெரியுமா?

இந்தியாவெங்கும் கொட்டிக்கிடக்கும் அழகைக் காண நமக்கு ஒரு ஆயுள் போதாது. எனினும் கேமரா எனும் அற்புத கருவி இதை சாத்தியப்படுத்தி காண்பிக்கிறது.

நம்மால் இந்தியாவெங்கும் செல்ல முடியாவிட்டாலும் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் சென்று அள்ள அள்ள குறையாத அட்டகாசமான புகைப்படங்களை சில நிழற்பட கலைஞர்கள் படம்பிடித்து கொடுத்துள்ளனர்.

இவற்றின் மூலம் நம் தேசத்தின் பொக்கிஷங்களை எல்லோரும் கண்குளிர கண்டு ரசிக்க முடிகிறது. அந்த வகையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த 50 புகைப்படங்களை இங்கே பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பேதாப் பள்ளத்தாக்கு

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்கம் நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் பேதாப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது.

சோழர் தலைநகரத்தின் பழமையான அரிய புகைப்படங்கள்

 

 

புஷ்கர் ஏரி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழம்பெரும் நகரமான புஷ்கர் நகரிலுள்ள புஷ்கர் ஏரி.

 

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

500-க்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்களை கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் சொர்க்கமாகவே திகழ்ந்து வருகிறது.

படம் : Venkatesh K

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

படம் : Pkdinuu

டால்ஃபின் மூக்கு

கொடைக்கானலில் உள்ள டால்ஃபின் மூக்கு பகுதி.


ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

பஹாய் வழிபாட்டுத்தலம், டெல்லி

2001-ஆம் ஆண்டில் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் விஜயம் செய்யும் ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாக பஹாய் வழிபாட்டுத்தலம் இடம்பெற்றுள்ளது. பஹாய் கோயில் அல்லது தாமரைக்கோயில் என்றழைக்கப்படும் இந்த அற்புதமான வழிபாட்டுத்தலம் 1986-ஆம் ஆண்டு புது டெல்லியில் திறக்கப்பட்டதிலிருந்தே பயணிகள் கூட்டம் கூடமாக வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

படம் : Indianhilbilly

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Iamkarna

தூத்சாகர் அருவி

உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் அறிமுகமாகும் சீன் இந்த அருவியின் பின்னணியில்தான் படமாக்கப்பட்டது. இந்த அருவியை கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் அடைய முடியும்.

படம் : Purshi

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஃபிளமிங்கோ என்ற பூநாரைகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்தப் ஃபிளமிங்கோ என்ற பூநாரைகள் பறவைகளை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் கண்டு ரசிக்கலாம்

 

சித்ரகோட் அருவி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சித்ரகோட் அருவி அமைந்துள்ளது.

படம் : Iamg

 

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

நெல்லியம்பதி

பாலக்காடு நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது நெல்லியம்பதி மலைவாசஸ்தலம். எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களும், காப்பித் தோட்டங்களும் சூழ்ந்து காணப்படும் நெல்லியம்பதி ஸ்தலத்தை அடைய நாம் எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை கடந்துசெல்ல வேண்டும். 

 

லக்‌ஷ்மண் ஜூலா, ரிஷிகேஷ்

ராமனின் தம்பி லட்சுமணன் இந்த பாலத்தில் கங்கை நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது. இது உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ளது.

படம் : Tylersundance

கிர் தேசிய பூங்கா

இந்தியாவில் ஆசிய சிங்கங்களுக்காக புகழ்பெற்ற சரணாலயங்களில் கிர் தேசிய பூங்கா முக்கியமானது. இங்கு ஆசிய சிங்கங்களைத் தவிர காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள், நரிகள், புனுகுகள், இந்திய கீரிப்பிள்ளைகள், பாலைவனப் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் ஆசிய சிங்கங்களின் இனவிருத்திக்காக சிறப்பு மறுவாழ்வு நிகழ்ச்சித்திட்டமும் இங்கே மேற்கொள்ளப்படுகிறது.

படம் : Asim Patel

தலையாணை அணை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள அழகிய அணை இந்த தலையாணை அணை.

படம் : Sukumaran sundar

பத்மசம்பவா

ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றான ரேவால்சார் ஏரிக்கு அருகே இந்த பத்மசம்பவா சிலை அமைந்துள்ளது. இது 123 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

படம் : John Hill

மாஜூலி தீவு

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. இந்தத் தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.

படம் : Kalai Sukanta

பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது.

படம் : Sidharthkochar

தாஜ் மஹால், ஆக்ரா

தாஜ் மஹாலை சாதாரணமாக பார்த்தாலே மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதிலும் சூர்ய அஸ்த்தமனத்தின்போது தாஜ் மஹால் தாவித் தாவி வந்து உங்கள் இதயத்திலேயே நிரந்தரமாக குடிபுகுந்து விடும்! ஆனால் உங்கள் காதலரோடு மட்டும் இங்கே வந்துவிடாதீர்கள், அப்புறம் தாஜ் மஹால் அழகில் உங்கள் காதலர் கண்ணுக்கு தெரியமாட்டார்!!

 

மூணார்

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

படம் : Bimal K C

பாம்பன் பாலம்

பாந்த்ரா-வோர்லி கடற்பாலத்துக்கு பிறகு இந்தியாவின் 2-வது பெரிய கடற்பாலமாகவும், இந்தியாவின் முதல் கடல் பாலமாகவும் பாம்பன் பாலம் அறியப்படுகிறது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். இந்தப் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (மியாமிக்கு அடுத்ததாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு இடையேயே இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

படம் : Sriram Natrajhen

ஆலப்புழா

ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும், அதன் நடுவே உங்கள் காதல் துணையோடு படகு இல்லத்தில் பயணம் செய்யும் அனுபவமும் மெய்மறக்கச் செய்து உங்கள் உணர்வுகளை எங்கோ இழுத்து சென்றுவிடும்.

 

ஆலி

ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

படம் : Mandeep Thander

ஹுசேன் சாகர் ஏரி

எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் இந்த பிரம்மாண்ட ஏரி ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது. இது 1562-ஆம் ஆண்டு ஹஸரத் ஹுசைன் ஷா வாலி என்பவரால் உருவாக்கப்பட்டது.

படம் : Alosh Bennett

மஹாபலேஷ்வர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

 

மெஹ்ரான்கர் கோட்டை, ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 150 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் மெஹ்ரான்கர் கோட்டையானது அமைந்துள்ளது. ஏழு நுழைவாயில்களைக் கொண்டுள்ள இந்தக் கோட்டையின் 2-வது வாசலில் பயணிகள் பீரங்கி குண்டுகள் தாக்கிய அடையாளங்களைக் காணலாம். இந்தக் கோட்டையின் ஒரு பகுதி தற்போது மியூசியமாக மாற்றப்பட்டு இங்கு பலவிதமான ராஜபல்லக்குகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அது தவிர இந்த அருங்காட்சியகத்திலுள்ள 14 காட்சி அறைகளில் போர்க்கருவிகள், தளவாடங்கள் மற்றும் உடைகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் : Tim Dellmann

ரிஷிகேஷ் வெள்ளை நீர் சவாரி

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதியில் வெள்ளை நீர் சவாரி செய்வது சாகசத்தின் உச்சம் என்று சொல்லலாம். இங்கு 5 நிலைகளில் பயணிகள் வெள்ளை நீர் சவாரியில் ஈடுபடுகின்றனர். அதாவது சிறிய அலைகளில் சவாரி, மிதமான அலைகள், கடினமான அலைகளில் சவாரி, கடினமான அலைகள் மற்றும் நெருக்கடியான பாதை, மிகக்கடுமையான அலைகள் என்று படிப்படியாக 5 நிலைகளில் இந்த வெள்ளை நீர் சவாரியில் நீங்கள் ஈடுபடலாம்.

படம் : AbinoamJr

களரி

மைசூரின் தசரா பண்டிகையின் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் கேரளாவின் களரி.

 

கஞ்சன்ஜங்கா

இந்தியாவின் மிக உயரமான சிகரமாகவும், உலகின் 3-வது உயரிய சிகரமாகவும் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் அறியப்படுகிறது. இந்திய-நேபால் எல்லையில் சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,586 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Partha Sarathi Sahana

டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே

டார்ஜீலிங் மலை ரயில் பாதை (1879-1881)-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது முதலில் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும், 2-ஆம் உலகப்போரின் போது ஆயுதங்களுடன் சிப்பாய்களும் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். அதன் பின்னர்தான் இந்த அழகிய ரயில்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் பயணிக்கிறது. அதோடு குட்டி குட்டி பெட்டிகளை பழமையான நீராவி இஞ்சின் இழுத்துச் செல்ல இறுதியில் 86 கி. மீ பயணம் செய்து டார்ஜீலிங்கை அடைகிறது.

 

கஜுராஹோ

உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

 

ஆக்ரா கோட்டை, ஆக்ரா

ஆக்ரா கோட்டை அல்லது செங்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வரலாற்றுக்கோட்டை டெல்லியிலுள்ள செங்கோட்டைக்கு முன்னோடியாகும். வடிவவைப்பு மற்றும் கலையம்சங்கள் போன்ற யாவற்றிலும் ஒத்து காணப்படும் இந்தக் கோட்டைகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. பிறை நிலா வடிவில் யமுனை நதிக்கு எதிரே ஆக்ரா கோட்டை அமைந்துள்ளது.

படம் : Digvijay singh pundir

மைசூர் அரண்மனை

இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து மைசூர் அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளை கொண்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அதோடு இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இப்படி கலைப்பொக்கிஷமாக திகழும் மைசூர் அரண்மனையில் பொதுவாக எல்லா நாட்களிலும் வெளிநாட்டவர் கூட்டம் காணப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது வெளிநாட்டவர் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

 

சௌகம்பா

உத்தரகண்ட் மாநிலத்தின் கட்வால் இமாலயப் பகுதியில் சௌகம்பா சிகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7,138 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Ishwari Rai

தால் ஏரி

'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' அல்லது 'ஸ்ரீ நகரின் அணிகலன்' என்று அழைக்கப்படும் தால் ஏரி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மாபெரும் இமயமலையை பின்னணியாகக் கொண்டு 26 கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படும் இந்த ஏரி 'ஷிக்காரா' அல்லது மரப் படகுகளுக்காக மிகவும் புகழ்பெற்றது.

படம் : Basharat Shah

முருதேஸ்வர், கர்நாடகா

அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

இந்தியாவின் மிக நீண்ட பாலமான பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் ரூபாய் 1600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சீ லிங்க் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளுக்கு இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பு 1 மணிநேரமாக இருந்த பாந்த்ரா-வோர்லி இடையேயான பயண நேரம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. 2009-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தப் பாலத்தை தினமும் 37,500 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இதுபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படியிருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம்!

 

குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்

இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் 4-வது கோயில் எனும் பெருமையை குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது. இங்கு மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தின் பாலகோபால ரூபத்தில் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலில் கிருஷ்ணலீலாக்கள் எனப்படும் கிருஷ்ணரின் இளம் பருவக்கதைகள் சுவர்களில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் பலவித கர்நாடக இசைக்கச்சேரிகளும் பாரம்பரிய கேரள நடனக்கலை வடிவங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

 

கேதாரேஷ்வர் குகை

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தில் உள்ள ஹரிஷ்சந்திரகட் கோட்டையில் இந்த கேதாரேஷ்வர் குகை அமைந்துள்ளது.

 

விக்ரமாதித்யா

இந்திய விமானம் தாங்கி கப்பல் விக்ரமாதித்யா கடலில் சீறிக்கொண்டு செல்லும் காட்சி.

படம் : Indian Navy

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், அம்ரித்ஸர்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தக் கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது.

 

அஞ்சாவ் மாவட்டம்

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டம்.

படம் : Arif Siddiqui

சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை

மாமல்லபுரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த முதலைப்பண்ணையில் 5000-த்துக்கும் மேற்பட்ட முதலைகள் பாதுகாக்கப்படுகின்றன. படம் : Adam63

 

 

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

 

கேரளாவின் திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், கொச்சியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் தற்கொலைக்காட்சி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில்தான் படம்பிடிக்கப்பட்டது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் சிறப்புப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது. படம் : Iriyas

விக்டோரியா மெமோரியல்

கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் தாஜ் மஹாலை போன்றதொரு தோற்றத்துடன் விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921-ஆம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. படம்

த்ராஸ் பள்ளத்தாக்கு

ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் த்ராஸ் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

விசாகப்பட்டணம் பீச் லைன்

வங்காள விரிகுடாவின் நீண்ட பீச் லைனுடன் 40 கி.மீ நீளத்துக்கு நீண்டு கிடக்கிறது விசாகப்பட்டணத்தின் மரைன் டிரைவ். கைலாசகிரியிலிருந்து, விசாகப்பட்டணம் செல்லும் கடற்கரைச் சாலை கவின் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் பசுமையான கிழக்கு தொடர்ச்சி மலைகள், மறுபக்கம் வங்காள விரிகுடா என்று இந்த கடற்கரைச் சாலையில் பயணிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

 

 

அலகாபாத் கும்பமேளா

கங்கை, யமுனை நதிகளோடு கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஒன்று கூடும் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா விழா கொண்டாடப்படுகிறது. இதில் கடந்த 2001ம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் 4 கோடி பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே வேறு எந்த திருவிழாவிற்கும் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இதுவரையில் திரண்டதில்லை என்று பதிவாகியிருக்கிறது!

சோனாமார்க் டீர் ஃபாரேஸ்ட்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் அமையப்பெற்றுள்ள டீர் ஃபாரேஸ்ட்.

 

 

கயாக் சவாரி

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் கயாக் படகுச் சவாரி.

பங்காபூர் மயில் சரணாலயம்

கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பான்காபூர் மயில் சரணாலயத்தில் ஆண் மயில் ஒன்று தோகை விரித்தாடும் அற்புதக் காட்சி.

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

English summary

50 best Travel Photographs taken in india

50 best Travel Photographs taken in india
Please Wait while comments are loading...