Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

By Super Admin

கோடை காலம் கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது, வீட்டை வீட்டு வெளியே வந்தால் வெயில் மண்டையை பிளக்கிறது என்று எல்லோரும் கோடையின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

சிம்லா ஸ்பெஷல்!!! உடனே முந்துங்கள்!

இதுல குறைந்த பட்சம் 10 இடங்களுக்கு மேல போனவங்க யாராச்சும் இருக்கீங்களா?.. அப்படின்னா உங்க பெயரை கீழ கமண்ட் பண்ணுங்க....

எங்காவது குளிர்ச்சியான பகுதிக்கு சென்றுவிட எல்லோர் மனதும் துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்காகவே இந்தியாவிலுள்ள 75 மிகச்சிறந்த கோடைகால வாசஸ்தலங்களை தேர்ந்தெடுத்து அளித்துள்ளோம்.

இளைஞர்களை அதிகம் ஈர்த்த அந்த 50 படங்கள் இவைஇளைஞர்களை அதிகம் ஈர்த்த அந்த 50 படங்கள் இவை

அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு

காசியின் பல முகங்கள்!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த மலைவாசஸ்தலத்தின் கவின் கொஞ்சும் இயற்கையழகு ஹாப்பி டேஸ், டார்லிங், கதா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

படம் : Sunny8143536003

சோப்தா

சோப்தா

சோழர் உலகத்துக்குள் போக ஆசையா உள்ளே வாங்க

சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

படம் : Vvnataraj

வில்சன் ஹில்ஸ்

வில்சன் ஹில்ஸ்

அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் அமைந்துள்ள வில்சன் ஹில்ஸ், கடலின் காட்சியைக் காணக்கூடிய உலகின் ஒரு சில மலைவாசஸ்தலங்களில் ஒன்று.

படம் : Asim Patel

லடாக்

லடாக்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

இமயமலையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் லடாக், மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தையும்,வடக்கே சீனாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள்.

படம் : Prabhu B

டல்ஹெளசி

டல்ஹெளசி

பென்ஸ் கார் தெரியும்.... பென்ஸ் ரயில்? இத படிங்க!

ஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை காலங்களை சிறப்பாக செலவிடுவதற்காக உருவாக்கிய நகரம் தான் இது.

படம் : prakhar

அரு

அரு

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அட்டகாசமான சுற்றுலாத் தலமான அரு, ஏரிகள், மலைகள், நதி, பள்ளத்தாக்கு என்று இயற்கையழகின் மொத்த உருவமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Irfanaru

கஜ்ஜார்

கஜ்ஜார்

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

துணிகர சாகச முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஹிமாச்சல பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் கஜ்ஜார், மிகவும் ஏற்ற இடமாக இருக்கும். கலாடோப் எனும் இடத்திலிருந்து 3 நாட்கள் மலையேற்றம் செய்து இந்த இடத்தை அடையலாம். சிரமமான 3 நாள் பயணத்திற்கு பின்பு பயணிகளை வெண்பனி படர்ந்த பிரதேசங்கள் வரவேற்கின்றன.

படம் : SriniG

பி.ஆர் மலைகள், கர்நாடகா

பி.ஆர் மலைகள், கர்நாடகா

பாகுபலி 2 படத்துல வர்ற இடத்துக்கு நேர்ல போக ஆசையா? உடனே வாங்க

பி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பாறையேற்றம், காவேரி, கபிலா ஆறுகளில் ஆற்றுப்படகு சவாரி போன்றவற்றுடன் தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்களும் ஏராளமாக இந்த ஸ்தலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

படம் : Anup Hela

குல்மார்க்

குல்மார்க்

மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் பகுதி 'கோண்டோலா' கேபிள் கார் பயணத்துக்காக உலக அளவில் மிகவும் பிரபலம். இந்த கேபிள் கார் உலகின் 2-வது உயரமான கேபிள் கார் பயணமாக அறியப்படுகிறது. அதோடு பனிச்சறுக்கு விளையாட்டுக்காகவும் குல்மார்க் நகரம் புகழ்பெற்றது.

படம் : Codik

குலு

குலு

கொடைக்கானலுக்கு ஒரு கூல் விசிட்!!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள குலு மாவட்டம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி' என்று பிரபலமாக அறியப்படுகிறது. பியாஸ் ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பிரதேசம் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகுக்காக புகழ் பெற்றுள்ளது.

படம் : Rajeev Maurya

மணாலி

மணாலி

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மணாலி மலைவாசஸ்தலம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி' என்று அழைக்கப்படுகிறது. குலு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் குலுவை போலவும், சிம்லா போலவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலமாக திகழ்கிறது.

படம் : sahil

கெம்மன்னுகுண்டி

கெம்மன்னுகுண்டி

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மன்னுகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மன்னுகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.

படம் : Srinivasa83

தேவிகுளம்

தேவிகுளம்

கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

படம் : Kerala Tourism

சோலன்

சோலன்

இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் அதிகமான காளான் விவசாயம் நடைபெறுவதால் 'இந்தியாவின் காளான் நகரம்' என்று அழைக்கப்படுகின்றது. இங்கு முக்கிய தெய்வமாக வழிபடப்படும் சோலொனி தேவி என்னும் இந்து தெய்வத்தின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. இந்த இடம் முழுவதும் அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.

படம் : Garconlevis

தேக்கடி

தேக்கடி

கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தேக்கடி' கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு விசேஷமான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும்.

சைல்

சைல்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் சைல். உலகத்திலேயே மிகவும் உயரமான இடத்தில், 2444 மீட்டர் உயரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று இங்கு அமைந்திருப்பதோடு, ஒரு போலோ மைதானம் ஒன்றையும் இங்கு நீங்கள் பார்க்கலாம்.

படம்

வாகமண்

வாகமண்

இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் வாகமண் நகரமாகும். பசுமையான சமவெளிப்பகுதிகள், வான்முட்டும் நீல மலைகள், வளைந்தோடும் ஆறுகள், பெருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், தூய்மை நிறைந்த குளுமையான காற்று மற்றும் அடர்ந்த பைன் மரக்காடுகள் போன்ற எழில் அம்சங்கள் இந்த வாகமண் மலைவாசஸ்தலத்தை பலரும் விரும்பும் சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளன.

படம் : Visakh wiki

கூர்க்

கூர்க்

கூர்க் மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

சாபுதாரா

சாபுதாரா

குஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள சாபுதாரா அழகிய எழில் கொஞ்சும், பசுமை அடர்ந்த மலை வாழிடமாக சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது.

படம் : Master purav

பஹல்கம்

பஹல்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் பஹல்கம் எனும் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது. ஹிந்துக்களின் புனித பயணமான அமர்நாத் யாத்திரை பஹல்கமை கடந்து தான் செல்ல வேண்டும். பஹல்கமிலிருந்து இந்த யாத்திரையை முடிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்.

படம் : KennyOMG

குஃப்ரி

குஃப்ரி

குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற பனிச்சறுக்கு ஸ்தலமான குஃப்ரியில் பனிமலையேற்றம், குதிரையேற்றம், கேம்பிங்க், கோ- கார்ட்டிங்க் போன்ற சாகச விளையாட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

மூணார்

மூணார்

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

படம் : Bimal K C

வரந்தா மலைத்தொடர்கள்

வரந்தா மலைத்தொடர்கள்

புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். இந்த பகுதி முழுக்க அடர்த்தியும் பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று தாராளமாக இயற்கை அன்னை எல்லையில்லா வளங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.

தர்மஷாலா

தர்மஷாலா

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா பள்ளத்தாக்கின் நுழைவு வழியாக கருதப்படும் தர்மஷாலா, மனம் மயக்கும் பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. தௌலதர் மலைத்தொடர்கள் இதன் பின்னணியிலிருந்து இதன் கண்ணுக்கினிய அழகை மேலும் அதிகப்படுத்துகிறது.

படம் : E. B

லோனாவலா

லோனாவலா

மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தொலைவிலும் லோனாவலா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த கவின் கொஞ்சும் மலைவாசஸ்தலம் சந்தடி மிகுந்த நகரச் சூழலிலிருந்து முற்றிலும் விலகி, வருடம் முழுவதுமே மாசற்ற சுற்றுப்புறச்சூழல், தூய்மையான காற்று, இனிமையான பருவநிலை ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளதால் ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இதன் காரணமாக இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஆண்டுதோறும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

படம் : Ravinder Singh Gill

நெல்லியம்பதி

நெல்லியம்பதி

பாலக்காடு நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது நெல்லியம்பதி மலைவாசஸ்தலம். எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களும், காப்பித் தோட்டங்களும் சூழ்ந்து காணப்படும் நெல்லியம்பதி ஸ்தலத்தை அடைய நாம் எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை கடந்துசெல்ல வேண்டும்.

முன்ஷியாரி

முன்ஷியாரி

முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

படம்

யூக்சோம்

யூக்சோம்

இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு யூக்சோம் நகருக்கு உண்டு. அதாவது இங்குள்ள உள்ளூர் மக்களே சுற்றுலாக்குறிய சுற்றுப்புறச்சூழலை சீராக்குவதற்கான மேம்பாடுகளை செய்து வருவதால், இந்த இடம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

படம் : Kothanda Srinivasan

மாத்தேரான்

மாத்தேரான்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே போன்ற பரபரப்பான, சந்தடி நிறைந்த பெரு நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிற்றுலாத்தலமாக மாத்தேரான் புகழ்பெற்றுள்ளது. மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் உள்ளே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மோட்டார் வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபோல ஆசியாவிலேயே வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ள ஒரே பகுதியாக மாத்தேரான் திகழ்கிறது.

படம் : Omkar A Kamale

தனௌல்டி

தனௌல்டி

ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம்.

படம் : Alokprasad

பித்தோராகர்

பித்தோராகர்

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும், மறுபுறம் அழகிய அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதோடு இங்கு பாய்ந்தோடும் காளி ஆறு பித்தோராகர் மாவட்டத்தையும், நேபாள் பகுதியையும் பிரிக்கிறது.


படம் : Shyamal

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு எனும் பெயருக்கு ராமபிரானின் பாதம் பட்ட மண் என்பது பொருளாகும். அதாவது சீதாதேவியை தேடி ராமர் இப்பகுதிக்கு வந்தபோது இந்த மலையில் அவர் காலடி பட்டதால் இம்மலைப்பகுதி ராமக்கால்மேடு என்ற பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம்.

ஜோஷிமத்

ஜோஷிமத்

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் புனித நகரமான ஜோஷிமத் இமயமலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த எழில் கொஞ்சும் மலைப்பிரதேசத்தில் சுமார் 1200 வருடங்கள் பழமையான கல்பவிருக்ஷா என்ற மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்து ஆதி குரு ஷங்கராச்சார்யா தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

படம் : christian0702

ராணிபுரம்

ராணிபுரம்

காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராணிபுரம் மலைவாசஸ்தலத்தில் அருமையான 2 டிரெக்கிங் பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் அமைதியும், அடர்த்தியும் கொண்ட அழகான பசுமை காடுகளால் சூழப்பட்டுள்ளன. இங்கு விதவிதமான பட்டாம்பூச்சிகளுடன், எண்ணற்ற பறவைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு கேரள வனத்துறையால் வனவிலங்கு சரணாலமாக மாற்றப்பட்டுள்ள ராணிபுரம் காடுகளில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்களையும் பார்க்க முடியும்.

நௌகுசியாடல்

நௌகுசியாடல்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடலில் உள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

படம் : Dr Satendra

தோரண்மால்

தோரண்மால்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ளது தோரண்மால் மலைவாசஸ்தலம். நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால், மஹாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.

படம் : Angelo Correia

லாசுங்க்

லாசுங்க்

வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை நகரமான லாசுங்க், கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அடுக்கு நீர்வீழ்ச்சிகள், தூய நீரோடைகள், மற்றும் பரந்த கண்ணுக்கினிய ஆப்பிள் தோட்டங்கள் ஆகியன சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றவை.

படம் : Snthakur

சௌகோரி

சௌகோரி

உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த சிறிய கிராமத்தில் கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். அவற்றோடு கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவை இங்கு பயணிகளை கவரும் அம்சங்கள்.

படம் : Tribhuwan

காலிம்பொங்

காலிம்பொங்

காலிம்பொங் இரு வேறு உலகங்களின் சிறந்த பகுதிகளை உங்களுக்கு வழங்குகின்றது. இங்கு நீங்கள் மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமான கலை, உணவு, மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அனுபவித்து மகிழலாம். அதைத்தவிர இங்குள்ள புத்த மத செல்வாக்கானது, உங்களுக்கு இமயமலையின் மடியில் மஹாபாரத காலத்தின் நடுவில் வாழ்வது போன்ற உணர்வை வழங்குகின்றது.

படம் : Anuj Kumar Pradhan

ராணிக்கேத்

ராணிக்கேத்

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ராணிக்கேத் மலைவாசஸ்தலம் நைனித்தால் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், அல்மோரா நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிப்பதற்கேற்றவாறு பைன், ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த பசுமையான இயற்கை எழிற்சூழலை கொண்டுள்ளது. இது செழிப்பான புல்வெளிகள் மற்றும் இயற்கை எழில் ததும்பி வழியும் வனப்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

படம் : Mrneutrino

மால்ஷேஜ் காட்

மால்ஷேஜ் காட்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன், கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது மால்ஷேஜ் காட் மலைவாசஸ்தலம். இங்கு மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத்தாவரங்களும், உயிரினங்களும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

படம் : Rudolph.A.furtado

கௌஸனி

கௌஸனி

உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 6075 அடி உயரத்தில் கௌஸனி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.

படம் : Ekabhishek

ஊட்டி

ஊட்டி

மலைகளின் ராணியாக திகழும் ஊட்டியை பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நீலகிரி மலைப்பாதையில் மலைரயிலில் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே ஊட்டிக்கு செல்லும் அனுபவமே போதும்! அதன் பிறகு ஊட்டியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏரி, குதிரைச் சவாரி என்று அற்புதமான அனுபவத்தை ஊட்டி உங்களுக்கு தர காத்திருக்கிறது.

மணாலி

மணாலி

ஹிமாச்சல பிரதேசத்தில் சிம்லாவை போலவே அதிக மக்களால் சுற்றிப் பார்க்கப்படும் மலைவாசஸ்தலங்களில் மணாலி முக்கியமானது. இங்கு பனிக்காலங்களில் மவுண்ட்டெயின் பைக்கிங், பாராகிளைடிங், பனிச்சறுக்கு, ஜோர்பிங் போன்ற சாகச விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.

படம்

சிம்லா

சிம்லா

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலை நகரமாக திகழும் சிம்லா, 'கோடை காலப் புகலிடம்', 'மலைகளின் ராணி' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. சிம்லாவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் பனிக்காலங்களில் இந்த எழில்கொஞ்சும் மலைப்பிரதேசத்தை தேடி வருகின்றனர்.

படம் : Smitanarang

டார்ஜீலிங்

டார்ஜீலிங்

இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு பரந்து விரிந்து காணப்படும் பச்சைத் தேயிலைத் தோட்டங்கள், அழகிய இயற்கைக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த மலைவாசஸ்தலத்தை மிகச் சிறந்த கோடைகால ஸ்தலமாக திகழச்செய்துகொண்டிருக்கின்றன.

படம்

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதோடு ஸ்ரீநகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தால் ஏரி உறைந்துபோய் பனிச்சறுக்கு விளையாட ஏற்றதாக மாறிவிட்டிருக்கும்.

படம் : Basharat Shah

முசூரி

முசூரி

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. சமயச் சிறப்பு வாய்ந்த இடங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.

படம் : RajatVash

பட்னிடாப்

பட்னிடாப்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம் பட்னிடாப். இங்கு பனிக்காலத்தின் போது பாராகிளைடிங், பனிச்சறுக்கு, ஜோர்பிங் போன்ற சாகச விளையாட்டுகள் மிகவும் பிரபலம்.

நைனித்தால்

நைனித்தால்

‘இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மலைவாசஸ்தலமாகும்.

படம் : Enjoymusic nainital

கொடைக்கானல்

கொடைக்கானல்

தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்காப்டும் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் மனதை என்றுமே குளிரவைக்க தவறியதில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரியைப் போலவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கொடைக்கானலில் பிரபலம். இந்த குறிஞ்சி மலர்கள் கடைசியாக 2006-ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தன.

படம் : Challiyan

தேன்மலா

தேன்மலா

திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த தேன்மலா அமைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சூழலியல் சுற்றுலாத்திட்டம்' (இயற்கை சுற்றுலா வளாகம்) இப்பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேன்மலா நகரம் பலவிதமான அற்புத மூலிகைத்தாவரங்களுக்கும் தேனுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

படம் : Augustus Binu

பொன்முடி

பொன்முடி

பொன்முடி மலைவாசஸ்தலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த அற்புத மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதோடு, ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

படம் : Pillai.mech

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

பஞ்ச்கணி

பஞ்ச்கணி

ஆங்கிலேயருக்கு பிடித்தமான கோடை வாசஸ்தலமாக விளங்கிய வரலாற்று பின்னணியைக் கொண்ட பஞ்ச்கணி இன்றளவும் அதனுடைய குளுமையான பருவ நிலைக்காக அருகிலுள்ள வெப்பமான சமவெளிப்பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும்.

படம் : Akhilesh Dasgupta

சோனாமார்க்

சோனாமார்க்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளசோனாமார்க் நகரம் பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் மலையேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. குறிப்பாக பனிச்சறுக்கிற்கான எல்லா பாதைகளும் சோனாமார்க் நகரத்திலிருந்தே தொடங்குகின்றன.

படம் : Hidden macy

பண்டார்தரா

பண்டார்தரா

மேற்குதொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் பண்டார்தரா, புகழ்பெற்ற ஹாலிடே ரிசார்ட் கிராமமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த பண்டார்தரா, மும்பையிலிருந்து 185 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது.

படம் : AkkiDa

கண்டாலா

கண்டாலா

கடுமையான உழைப்புக்குப்பின், வார இறுதியில், உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் கண்டாலா என்ற மலைப்பிரதேசம். மகாராஷ்டிர மாநிலத்தில் சஹயாத்ரி மலைகளின் மேற்குப்பகுதியில் இந்த மலைவாசஸ்தலம் உள்ளது.

படம் : Alewis2388

குன்னூர்

குன்னூர்

உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் குன்னூர் மலைவாசஸ்தலம், கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

படம் : Challiyan

கோத்தகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை.

படம் : earnest.edison9

வால்ப்பாறை

வால்ப்பாறை

வால்ப்பாறை மலைப்பிரதேசம் மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை உதாரணமாக சொல்லலாம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக திகழ்கின்றது.

படம் : D momaya

ஏலகிரி

ஏலகிரி

ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு ஏலகிரி வளர்ச்சி அடையவில்லை என்றாலும் சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராகிளைடிங், மலையேறுதல் முதலிய விளையாட்டு வகைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் ஏலகிரியை ஒரு சாகச சுற்றுலா மையமாக பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

ஏற்காடு

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

படம் : Riju K

பத்ரிநாத்

பத்ரிநாத்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மலைவாசஸ்தலம் நாட்டின் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

படம் : Greatartistssteal

கேதார்நாத்

கேதார்நாத்

இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில், கடல் மட்டத்திலிருந்து 3584 மீ உயரத்தில் கேதார்நாத் ஸ்தலம் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

படம் : Paul Hamilton

பவுரி

பவுரி

உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் மாவட்டத்தில் பவுரி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

படம் : Fowler&fowler

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் இந்துக்களின் மிக முக்கிய இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் ரிஷிகேஷில் குவிகிறார்கள்.

படம் : Tony Leon

ருத்ரபிரயாக்

ருத்ரபிரயாக்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

படம் : Vvnataraj

உத்தரகாசி

உத்தரகாசி

உத்தரகண்ட் மாநிலத்தில் பாய்ந்தோடும் பகீரதி நதிக்கரையில் உத்தரகாசி அமைந்துள்ளது.

படம் : Atarax42

லவாஸா

லவாஸா

மஹாராஷ்டிர மாநிலத்தின் புனே நகருக்கு அருகே அமைந்துள்ள லவாஸா மலைவாசஸ்தலம், இத்தாலியின் போர்டோஃபீனோ நகரைப் போன்று உருவாக்கப்பட்டதாகும்.

படம் : Cryongen

ம்யூஃபாங்

ம்யூஃபாங்

மிசோரம் தலைநகர் அய்சால் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ம்யூஃபாங் மலைவாசஸ்தலம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.

படம் : Coolcolney

காங்க்டாக்

காங்க்டாக்

காங்க்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1437 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

படம் : Ravinder Singh Gill

மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும்.

படம் : Sivaraj.mathi

பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

உத்தரகண்ட் மாநிலத்தில், மேற்கு இமயமலை பகுதியில் பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா அமைந்துள்ளது.

படம் : Kdhenrik

லந்தோர்

லந்தோர்

உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனிலிருந்து 35 கி.மீ தொலைவில் லந்தோர் மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது.

படம் : anurag agnihotri

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X