Search
  • Follow NativePlanet
Share
» »தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு அழகிய பயணம்!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு அழகிய பயணம்!!!

By

தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மொத்த சாலை தூரங்களில் 2% மட்டுமே இருப்பினும், இந்தியாவின் மொத்த போக்குவரத்தில் 40% இந்தச் சாலைகளின் மூலமாகவே நடைபெறுகிறது.

அதாவது 66,590 கி.மீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்ற வேளையில், அவற்றில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகளாக உள்ளன.

அதுமட்டுமல்லாமல் 4 வழிப்பாதைகள், 6 வழிப்பாதைகள் ஆகியவையும் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் மூலம் விபத்துகள் குறைந்திருப்பதோடு, போக்குவரத்து சுலபமாகி, பயணமும் இனிமையானதாக மாறியிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 1D (NH 1D)

தேசிய நெடுஞ்சாலை 1D (NH 1D)

ஸ்ரீநகர்-லே ஹைவே என்ற பெயரில் அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 1D முழுக்க முழுக்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளாகவே அமைந்துள்ளது. 422 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை லே-மணாலி ஹைவேவை அடுத்து லடாக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே பாதையாகும்.

படம் : Bodhisattwa

தேசிய நெடுஞ்சாலை 5

தேசிய நெடுஞ்சாலை 5

ஒரிசா மாநிலத்தின் ஜஹர்போக்ஹரியா என்னும் இடத்தையும், சென்னையையும் இணைக்கிறது தேசிய நெடுஞ்சாலை 5. 1533 கி.மீ நீளம் கொண்ட இந்தச்சாலை ஒரிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் ஊடாக செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இது அறியப்படுகிறது.

படம் : Enthusiast10

தேசிய நெடுஞ்சாலை 3

தேசிய நெடுஞ்சாலை 3

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா என்னும் இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 3 ஆகும். 1161 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை 4 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

படம் : Hkore

தேசிய நெடுஞ்சாலை 4

தேசிய நெடுஞ்சாலை 4

தேசிய நெடுஞ்சாலை 4 மகாராஷ்டிர மாநிலத்தின் தானேவையும், சென்னை மாநகரையும் இணைக்கிறது. 1235 கி.மீ நீளம் கொண்ட இந்தச்சாலை 4 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 2

தேசிய நெடுஞ்சாலை 2

தலைநகர் டெல்லியையும், கொல்கத்தா நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2, இந்திய அரசின் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1465 கி.மீ நீளம் கொண்ட இந்தச்சாலை 6 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

படம் : Avik Haldar

தேசிய நெடுஞ்சாலை 22

தேசிய நெடுஞ்சாலை 22

ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் தொடங்கி சண்டிகர் வழியாக சீன எல்லையில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் காப் எனும் சிறிய கிராமத்தில் சென்று முடிவடைகிறது. ஹிந்துஸ்தான்-திபெத் சாலை என்றும் அறியப்படும் இந்தச் சாலை 459 கி.மீ நீளம் கொண்டது.

படம் : Manojkhurana

தேசிய நெடுஞ்சாலை 8

தேசிய நெடுஞ்சாலை 8

தேசிய நெடுஞ்சாலை 8 தலைநகர் டெல்லி நகரையும், மகாராஷ்டிர தலைநகர் மும்பையையும் இணைக்கிறது. அதோடு இந்த நெடுஞ்சாலை காந்திநகர், ஜெய்ப்பூர், குர்கான், அஹமதாபாத், சூரத், வதோதரா போன்ற முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது.

படம் : V Malik

தேசிய நெடுஞ்சாலை 7

தேசிய நெடுஞ்சாலை 7

தேசிய நெடுஞ்சாலை 7 உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கிறது. 2369 நீளம் கொண்ட இந்தச் சாலை இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக அறியப்படுகிறது.

படம் : Animeshcmc

தேசிய நெடுஞ்சாலை 31

தேசிய நெடுஞ்சாலை 31

தேசிய நெடுஞ்சாலை 31 பீகார் மாநிலத்தில் அழரிபக்ஹ என்னும் இடத்தையும், அசாமின் குவஹாத்தி நகரையும் இணைக்கிறது. இந்தச் சாலை 1125 கி.மீ நீளம் கொண்டது.


படம் :Tanmoy Bhaduri

தேசிய நெடுஞ்சாலை 43

தேசிய நெடுஞ்சாலை 43

தேசிய நெடுஞ்சாலை 43 ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நடவலாசாவை, ஒடிஸா வழியாக சத்தீஸ்கரின் ராய்பூர் நகருடன் இணைக்கிறது. 551 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலைகள் 5 மற்றும் 6-ஐ இணைப்பதுடன், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக செல்கிறது.

படம் : Paalappoo

தேசிய நெடுஞ்சாலை 17

தேசிய நெடுஞ்சாலை 17

மும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவின் கொச்சி நகரையும் இணைக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலை 17. 1296 கி.மீ நீளம் கொண்ட இந்தச்சாலை இந்தியாவின் 7-வது நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் மங்களூர், கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் கொச்சி வழியாக செல்கிறது. மேலும் இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் இந்தச் சாலையின் ஒரு பக்கம் சௌபர்னிகா நதியும், மறுபக்கம் மரவந்தே கடர்கரையும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

தேசிய நெடுஞ்சாலை 47

தேசிய நெடுஞ்சாலை 47

கன்னியாகுமரி மற்றும் சேலம் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47, 650 கி.மீ நீளம் கொண்டது. மேலும் இந்தச் சாலை சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் நகரங்களையும் இணைக்கிறது.

படம் : Augustus Binu

தேசிய நெடுஞ்சாலை 76

தேசிய நெடுஞ்சாலை 76

உத்தரப்பிரதேசத்தின் அலஹாபாத் நகரையும், ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரா நகரையும் தேசிய நெடுஞ்சாலை 76 இணைக்கிறது. 1007 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை உதைப்பூர், கோட்டா, ஷிவ்புரி, ஜான்ஸி, பாண்டா வழியாக செல்கிறது.

படம் : Daniel Villafruela

தேசிய நெடுஞ்சாலை 46

தேசிய நெடுஞ்சாலை 46

வேலூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 46, தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய அமையப்பெற்றுள்ளது. மேலும் 132 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது.


படம் : Immanueldc

தேசிய நெடுஞ்சாலை 68

தேசிய நெடுஞ்சாலை 68

தேசிய நெடுஞ்சாலை 68, உளுந்தூர்பேட்டைக்கும் சேலத்திற்கும் இடையே 134 கி.மீ தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை உளுந்தூர்பேட்டையிலிருந்து எளவனசூர், தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி வழியாக சேலம் வரை செல்கிறது.

படம் : Thamizhpparithi Maari

தேசிய நெடுஞ்சாலை 1

தேசிய நெடுஞ்சாலை 1

தேசிய நெடுஞ்சாலை 1 அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, ராச்புரா, அம்பாலா, குருச்சேத்திரம், கர்னால், பானிப்பட், சோனிபட், மற்றும் தில்லி போன்ற நகரங்களுக்கு ஊடாகச் செல்கின்றது. 456 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை பாகிஸ்தான் எல்லையருகே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரி என்ற நகரையும், தலைநகர் டெல்லியையும் இணைக்கிறது.

படம் : Ekabhishek

தேசிய நெடுஞ்சாலை 45

தேசிய நெடுஞ்சாலை 45

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி தாம்பரம், திண்டிவனம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்கள் வழியாக தேனியில் சென்று முடிகிறது தேசிய நெடுஞ்சாலை 45. 472 கி.மீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை, கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு என்று அறியப்படுகிறது.

படம் : Rsrikanth05

தேசிய நெடுஞ்சாலை 11

தேசிய நெடுஞ்சாலை 11

தேசிய நெடுஞ்சாலை 11 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவையும், ராஜஸ்தானின் பிகானேர் நகரையும் இணைக்கிறது. 582 நீளம் கொண்ட இந்தச் சாலை ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக செல்வதுடன், பரத்பூர் தேசியப் பூங்கா போன்ற அழகிய சரணாலயங்களும் வழியில் தென்படுகின்றன.

படம் : Haros

தேசிய நெடுஞ்சாலை 13

தேசிய நெடுஞ்சாலை 13

மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் என்னும் இடத்தையும், கர்நாடகாவின் மங்களூர் நகரையும் இணைக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலை 13 ஆகும். 691 கி.மீ நீளம் கொண்ட இந்தச்சாலை 2 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

படம் : Tomas Belcik

தேசிய நெடுஞ்சாலை 67

தேசிய நெடுஞ்சாலை 67

தேசிய நெடுஞ்சாலை 67, கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுபேட் என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தையும் இணைக்கிறது. 555 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை 2 மாநிலங்களின் ஊடாக செல்கிறது.

படம் : dixon

    Read more about: சாலைகள்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X