Search
  • Follow NativePlanet
Share
» »ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த தட்சினேஸ்வர் காளி கோயிலை பற்றி தெரியுமா உங்களுக்கு?

ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த தட்சினேஸ்வர் காளி கோயிலை பற்றி தெரியுமா உங்களுக்கு?

கொலு பொம்மை வைத்து, பக்தி பாடல்கள் பாடி சக்தியின் வடிவான பார்வதி தேவியின் ஒன்பது ரூபங்களை வழிபடும் இந்த நவராத்திரி திருவிழா இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நவராத்திரி வேறெங்கும் இல்லாத அளவு கோலாகலமாக கொண்டாடப்படும்.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடபப்டுவதை போல கொல்கத்தா நகரம் முழுக்கவும் மிகப்பெரிய அளவிலான துர்க்கை சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. ஆட்டம் பாட்டம் என ஐந்து நாட்கள் நடக்கும் நவராத்திரி கொண்டாட்டங்களில் நாம் நிச்சயம் ஒருமுறையேனும் கலந்துகொள்ள வேண்டும்.

கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதோடு நின்றுவிடாமல் கொல்கத்தாவில் இருக்கும் புகழ்பெற்ற கோயில்களுக்கும் சென்று வரலாம். குறிப்பாக மகரிஷி ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த தட்சினேஸ்வர் காளி கோயிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

கொல்கத்தா நகரில் ஹூப்ளி நதியின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்திருக்கிறதுதட்சினேஸ்வர் என்ற ஊர்.

இந்த ஊரின் அடையாளமாக இருப்பது இங்குள்ள காளி மாதா கோயிலாகும். இங்கே காளி பவதாரிணியாக வழிபடப்படுகிறார்.

shankar s.

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

வங்காளத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த ராணி ரஷ்மோனி என்ற காளி பக்தையால் இக்கோயில் 1855ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

காளியின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் அவரை தரிசிக்க காசிக்கு செல்ல ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்த ராணி ரஷ்மோனியின் கனவில் வந்த காளி மாதா தட்சினேஸ்வரத்தில் தனக்கொரு கோயில் எழுப்பும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

shankar s.

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

1855 ஆண்டு மே மாதம் 31 தேதி ஸ்நான யாத்திரைக்கு பிறகு காளி மாதா சிலை இக்கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கோயிலை கட்டி முடிக்க 160 ஆண்டுகளுக்கு முன்பே ஒன்பதாயிரம் ருபாய் செலவாகியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படம்: ராணி ரஷ்மோனி

P.K.Niyogi

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

ஸ்ரீ ஸ்ரீ ஜகதீஸ்வரி மாகாளி கோயில் என்று நாமம் சூட்டபப்ட்ட இக்கோயிலின் முதல் தலைமை அர்ச்சகராக ராம்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவர் தனக்கு உதவியாக கோயில் பணிகளை கவனித்துக்கொள்ள தன்னுடைய இளைய சகோதரனையும் உடன் அழைத்து வந்தார். அவர் தான் பின்னாளில் மிகப்பெரிய ஆன்மீக குருவாக மாறிய ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவர்.

shankar s.

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர்காளி மாதாவின் அருளால் ஞானமடைந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் 30 வருடங்கள் இந்த காளி கோயிலில் தனது சீடர்களுடன் வாழ்ந்திருக்கிறார்.

ராமகிருஷ்ணரின் போதனைகளை கேட்பதற்காகவும், காளி மாதாவை தரிசிப்பதற்க்காகவுமே ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு யாத்திரை வந்திருக்கின்றனர்.

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயிலில் இருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த அறை.

Alan Perry

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

ராமகிருஷ்ணரின் மனைவியான சாராதா தேவி அம்மையார் வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.

Alan Perry

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

பழமையான 'நவ ரத்தினா' என்ற வங்காள கட்டிட முறைப்படி கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறையில் பவ தாரணியாக மிக உக்கிரமாக காட்சி தருகிறார் துர்க்கை அம்மன்.

Jagadhatri

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

மேலும் இக்கோயில் வளாகத்தில் 'ஆட் சலா' என்ற வங்காள கட்டிட முறைப்படி கிழக்கு பார்த்தப்படி இருக்கும் ஒரே மாதிரியான பன்னிரண்டு சிவன் கோயில்கள் இருக்கின்றன.

Sanjoyc

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

இக்கோயில் வளாகத்தில் இருந்து வட கிழக்கே கிருஷ்ணர் மற்றும் ராதே சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கோயிலொன்றும் இருக்கிறது.

Wiki-uk

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயிலை நிறுவியவரும் தன் வாழ்நாள் முழுக்க பெரும் காளி பக்தையாக வாழ்ந்தவருமான ராணி ரஷ்மோனி அவர்களுக்கும் ஒரு சிறிய கோயில் இந்ததட்சினேஸ்வர் காளி கோயில் வளாகத்திலேயே இருக்கிறது.

WoodElf

தட்சினேஸ்வர் காளி கோயில்

தட்சினேஸ்வர் காளி கோயில்

நவராத்திரியை கொண்டாட ஒருவேளை நீங்கள் கொல்கத்தா நகருக்கு செல்வதாக இருந்தால் அந்நகரில் தங்குவதற்கான ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த கோயிலுக்கு செல்வதோடு, பழமை மாறாத கொல்கத்தா நகருக்கும் செல்வது வாழ்வில் என்றென்றைக்கும் மறக்க முடியாத பயணமாக அமையும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X